தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈரோடு பகுதியில் பவானி ஆறு மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகியவற்றில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால், அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும், தமிழக அரசு 1962 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் தண்ணீர்
ChennaiHC, Water, Theft, Tamilnadu, Government, சென்னை, உயர்நீதிமன்றம், தண்ணீர், திருட்டு, தமிழக அரசு, உத்தரவு

சென்னை: தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு பகுதியில் பவானி ஆறு மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகியவற்றில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால், அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும், தமிழக அரசு 1962 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் தண்ணீர் பகிர்ந்தளிக்க உத்தரவிட வேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று (அக்.,22) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:


latest tamil news


உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஆதாரமாக உள்ள தண்ணீர் இல்லாமல், அவை வாழ முடியாது. கிடைக்கின்ற தண்ணீரை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஒரு தரப்புக்கு மட்டும் கிடைப்பதாக அமைந்து விடக்கூடாது. அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைக்கும் வகையில், பாசனப் பரப்பை முறையாக பதிவு செய்ய வேண்டும். விவசாய நிலங்களை விரிவுபடுத்துவதன் மூலம் நாடு பலனடையும்.

தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரை திருடுபவர்கள் மீது பொதுப்பணித் துறையும், நீர்வள ஆதாரத் துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் இல்லாமல், காவல்துறையும் வழக்குப் பதிவு செய்தால் தான் முறையான புகார்கள் வரும். எந்த ஒரு தனி மனிதனும் பாதிக்கப்படாத வகையில், அனைவருக்கும் தண்ணீர் பகிர்ந்தளிப்பதற்கான கொள்கையை வகுக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-அக்-202123:02:11 IST Report Abuse
Ramesh Sargam பாலாற்றில் இப்படி நீர் உறிஞ்சப்பட்டதாலும், மணல் கொள்ளை அடிக்கப்பட்டதாலும்தான் இன்று மழை காலத்தை தவிர அந்த ஆற்றில் மற்ற காலங்களில் தண்ணீரை பார்ப்பதே அரிதாகிவிட்டது. இப்ப மணலும் கண்ணுக்கு தென்படுவதில்லை. அதையும் "உறிஞ்ஜிவிட்டார்கள்" நமது "கழக கண்மணி கொள்ளையர்கள்"
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
22-அக்-202116:48:10 IST Report Abuse
raja இது குறித்து கர்நாடகாவுக்கு, கேரளாவுக்கும் சம்மன் அனுப்புவீர்களா எஜமான்..... தண்ணி தர மாட்டேன்னு சொல்லறானுவோ....தண்ணீரை பதுக்கி வைக்கிறானுவோ ...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
22-அக்-202116:45:45 IST Report Abuse
raja அப்போ மொதல்ல மாட்டப்போவது உடன்பிறப்பு கட்டிங் மேக்கப்பு துரைன்னு சொல்லுங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X