கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேர்வு எழுதாமல் சான்றிதழ் வழங்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவிட் பரவல் காரணமாக, தமிழகத்தில், அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரியர் தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி, ராம்குமார்
தேர்வு , சான்றிதழ், உயர்நீதிமன்றம் ,

சென்னை: தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவிட் பரவல் காரணமாக, தமிழகத்தில், அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரியர் தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி, ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் அரியர் தேர்வு மாணவர்களுக்கு இரண்டு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அரியர் தேர்வுகளை ரத்து செய்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை. தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவில்லை என தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.


latest tamil news



இதனை பதிவு செய்த நீதிபதிகள், தேர்வு எழுதாமல், எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என தெரிவித்ததுடன், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-அக்-202122:57:14 IST Report Abuse
Ramesh Sargam சரியான ஒரு தீர்ப்பு. இந்த தீர்ப்பு இன்று இப்படி வரவில்லையென்றால், நாளை பள்ளி/கல்லூரி செல்லாத மாணவர்களையும் இந்த அரசு பாஸ் என்று அறிவித்து சான்றிதழ் வழங்க வாய்ப்புள்ளது. மாணவ சமுதாயத்தை எப்படியாவது சீரழிக்கவேண்டும் என்பதே இந்த திமுக அரசின் எண்ணம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
22-அக்-202120:22:35 IST Report Abuse
RajanRajan அனைவருக்கும் பட்டம்....திராவிட அறிவாலய சுடர்..அறிவிப்பு..ஹீஹீஹீ பட்டு சேலை காற்றாட பருவ மேனி கூத்தாட குறும்பு பார்வை பார்த்தவரே எனை கூண்டுகிளியாய் அடைத்தவரே....கடைசிலே வேலை கிடைக்கல்லேன்னு பாலிடால் தேட வச்சிடுவனோ...என்ன அலங்கோலமடோ...
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
22-அக்-202119:59:31 IST Report Abuse
தமிழ்வேள் கல்வியை பொதுப்பட்டீயலிலிருந்து விடுவித்து , மத்திய பட்டியலுக்கு முற்றிலும் மாற்ற வேண்டும்..திராவிட் அரசுக்கு சாக்கடை அள்ளும் வேலையை மட்டும் கொடுத்தால் போதுமானது..சொரியான், அண்ணா, கட்டுமர கருத்தியல் மற்றும் சிந்தனைகள் முற்றிலும் சமூகத்திலிருந்து அகற்றி அழிக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயம்..இலலையேல் தமிழகம் உருப்படாது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X