ஆர்யன்கான் கஞ்சா கேட்டாரா?: நடிகை அனன்யா பாண்டேவிடம் 2வது நாளாக விசாரணை

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை: நடிகை அனன்யா பாண்டே உடனான உரையாடலில் ஆர்யன்கான் கஞ்சா ஏற்பாடு செய்யமுடியுமா எனக் கேட்டு ‛சாட்' செய்துள்ளதை சுட்டிக்காட்டி நடிகை அனன்யா பாண்டிவிடம் 2வது நாளாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் சோதனை
Ananya Panday, Chats Reveal, Arrange Ganja, She Agreed, Aryan Khan, No Evidence, NCB sources, அனன்யா பாண்டே, ஆர்யன்கான், உரையாடல், கஞ்சா, விசாரணை

மும்பை: நடிகை அனன்யா பாண்டே உடனான உரையாடலில் ஆர்யன்கான் கஞ்சா ஏற்பாடு செய்யமுடியுமா எனக் கேட்டு ‛சாட்' செய்துள்ளதை சுட்டிக்காட்டி நடிகை அனன்யா பாண்டிவிடம் 2வது நாளாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அதில் பயணித்த பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன்கான் உட்பட சிலர் போதை பொருள் வைத்திருந்ததும், பயன்படுத்தியதும் தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை ஆர்தர் சாலை சிறையில் ஆர்யன் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவரது 'வாட்ஸ் ஆப்' தொடர்பில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே பெயர் இடம்பெற்றிருந்தது.


latest tamil news


இதையடுத்து மும்பையில் உள்ள அவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின், அவருக்கு ‛சம்மன்' அனுப்பிய அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். அவரது 'லேப்டாப், மொபைல் போன்' ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2வது நாளாக இன்றும் (அக்.,22) அனன்யா பாண்டேவிடம் விசாரணை நடைபெற்றது.

அனன்யா பாண்டேவும், ஆர்யன்கானும் பேசிக்கொண்ட ‛சாட்' போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்துள்ளது. அப்போது அனன்யா பாண்டே, ஆரியன் கானுக்கு ‛கஞ்சா' ஏற்பாடு செய்வதாக கூறியதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.


latest tamil news


இது குறித்து தடுப்பு பிரிவு தரப்பில் கூறியதாவது: அனன்யா பாண்டே, ஆர்யன்கான் இடையிலான உரையாடலின்போது, ஆர்யன்கான் கஞ்சா ஏற்பாடு செய்யமுடியுமா என கேட்டு உள்ளார். அதற்கு, அனன்யா பாண்டே, நான் ஏற்பாடு செய்கிறேன் என பதிலளித்துள்ளார். இது குறித்து விசாரிக்கையில், கேலிக்காக கூறியதாக அனன்யா தெரிவித்தார். அனன்யா பாண்டேவும், ஆர்யன்கானும் பள்ளியில் ஒன்றாக படித்ததாகவும், ஆர்யன்கானின் சகோதரி சுஹானா, அனன்யாவின் நெருங்கிய தோழியாக இருந்ததாகவும் விசாரணையில் தெரிவித்தார். மேலும், தான் ஒருபோதும் போதைப்பொருள் உட்கொண்டதில்லை, யாருக்கும் சப்ளை செய்யவில்லை எனக் கூறினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-அக்-202122:13:43 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சிவன் கோயிலுக்கு போயிருந்தா கஞ்சாவை அரைச்சி பால்லே கலந்து சுவீட்டா குடுத்துருப்பாங்க.. பக்திக்கு பக்தியும் ஆச்சி.. ஃப்ரீ யா ஜிவ்வுன்னு கைலாசம் சுத்திப் பாத்தா மாதிரியும் ஆச்சி..
Rate this:
Cancel
22-அக்-202119:26:42 IST Report Abuse
Gopalakrishnan S நாற்பது வருஷங்களுக்கு முன்பு சுராங்கனி என்ற பாடல் பிரபலமாக இருந்தது. அதில் வரும் வரிகள் எனக்கு ஞாபகம் வருகிறது :. " நாங்க ரொம்ப நல்ல பிள்ளைக, கறி துன்ன மாட்டோம் ஊரான் வீட்டு கோழியைக் கண்டால் சும்மா விட மாட்டோம்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
22-அக்-202117:36:18 IST Report Abuse
வெகுளி புள்ளாண்டான் யோக்கிய சிகாமணின்னு திமுக சல்மாவே சான்றிதழ் குடுத்துட்டாங்களே... அப்புறம் எதுக்கு விசாரணை?.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X