யூ ட்யூப்பில் அசத்தும் குட்டிஸ்

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பார்வையாளர்களாக இருந்தவர்கள் எல்லாம் யூ ட்யூப் உபயாத்தில் படைப்பாளிகளாக மாறிவிட்டனர்வீட்டுச் சாப்பாடு செய்யறோம் பாருங்க, நாட்டு மருந்து தர்ரோம் வாங்கிக்குங்க என்று அவர்கள் செய்யும் அட்ராசிட்டியும் கொஞ்சம் அதிகம்தான்.இந்தப் பெரியவர்களுக்கு மத்தியில் அண்ணன் தங்கையான என இரு குழந்தைகள் நடத்தும் ‛10 பாயிண்ட்ஸ்' என்ற யூ ட்யூப் வரவேற்பை பெற்று வருகிறது.ஹரிஷ்



latest tamil news


பார்வையாளர்களாக இருந்தவர்கள் எல்லாம் யூ ட்யூப் உபயாத்தில் படைப்பாளிகளாக மாறிவிட்டனர்
வீட்டுச் சாப்பாடு செய்யறோம் பாருங்க, நாட்டு மருந்து தர்ரோம் வாங்கிக்குங்க என்று அவர்கள் செய்யும் அட்ராசிட்டியும் கொஞ்சம் அதிகம்தான்.
இந்தப் பெரியவர்களுக்கு மத்தியில் அண்ணன் தங்கையான என இரு குழந்தைகள் நடத்தும் ‛10 பாயிண்ட்ஸ்' என்ற யூ ட்யூப் வரவேற்பை பெற்று வருகிறது.
ஹரிஷ் தியாகராசன் (வயது 12) ஹர்ஷிதா( 7 )என்ற இருவர்தான் அந்த யூட்யூபர்.சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் முறையே ஏழாவது மற்றும் இரண்டாவது படிக்கும் இருவரும் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த போது ஏதாவது உருப்படியாக செய்யலாம் என்று எண்ணினர்,அவர்களது எண்ணத்திற்கு தந்தை விமல் தியாகராசன்,தாய் சிவரஞ்சனி ஆகியோர் வழிகாட்ட இந்த யூ ட்யூபை ஆரம்பித்தனர்.


latest tamil news


ஆரம்பத்தில் மட்டும்தான் சிறிது சிரமப்பட்டனர் அதன்பிறகு அவர்களுக்கு தலைப்பு தந்தால் போதும் தகவலை தேடி எடுத்து அள்ளித் தெளி்த்துவிடுவர்.
மிஸ்டர் பீன் ஒரு நகைச்சுவை நடிகர் என்பது மட்டும்தான் நமக்கு தெரியும் ஆனால் அவர் அந்த இடத்திற்கு வர, உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார் என்பதை இவர்களது வீடியோ பார்த்தபிறகுதான் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
அண்ணனும்,தங்கையும் மிஸ்டர் பீன் பற்றி உரையாடல் வழியாக விஷயத்தை நமக்குள் கடத்துகிறார்கள் அதிலும் ஹர்ஷிதாவின் கேலியான கேள்விகள் குபீர் சிரிப்பை வரவழைத்துவிடும்.
டூத் பேஸ்ட் பற்றி,பென்சில் தயாரிப்பது பற்றி என்று வாரம் ஒரு வீடியோ என்று இதுவரை இருபத்தைந்திற்கும் அதிகமான வீடியோவை போட்டுள்ளனர், வெறும் பேச்சு மட்டும் இல்லாமல் விஷயத்திற்கு தேவையான ஆடியோ வீடியோ போட்டோ கிளிப்புகளையும் இணைத்துள்ளனர் பேக்டிராப்பில் பேசும் பொருள் பற்றிய போட்டோ இருக்கிறது.
இப்படி பெரியவர்கள் தயாரிக்கக்கூடிய தரத்தில் இவர்களது யூட்யூப்பும இருக்கிறது.வீடியோக்கள் எல்லாமே புதுப்புது விஷயங்களை கொண்டுள்ளது எந்த வீடியோவாக இருந்தாலும் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருப்பது சிறப்பு.இவர்களது வீடியோக்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் கூட ரசிகர்களாக உள்ளனர்.பார்த்தால் நீங்கள் கூட ரசிகராகிவிடுவீர்கள் அதற்கான லிங்க் :https://www.youtube.com/c/10pointstamil
-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-அக்-202104:24:44 IST Report Abuse
NicoleThomson பார்த்து முருகராஜ் அவர்களே சிறுவர்கள் இந்த காலத்தில் பிங்க் பாந்தர் ,டொனால்டு டக் பார்க்கும் காலத்தை மிஸ் பண்ணிட போறாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X