சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் தகராறு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விடுதலை

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், தேர்தல் அலுவலர் காரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஊராட்சி கவுன்சிலர்கள் 8 பேர் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். 12 உறுப்பினர்களை கொண்ட கரூர் மாவட்ட ஊராட்சிக்கு கட்நத 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் 9
Vijayabhaskar,விஜயபாஸ்கர்

கரூர்: கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், தேர்தல் அலுவலர் காரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஊராட்சி கவுன்சிலர்கள் 8 பேர் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

12 உறுப்பினர்களை கொண்ட கரூர் மாவட்ட ஊராட்சிக்கு கட்நத 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் 9 இடங்களில் அ.தி.மு.க.,வும், 3 இடங்களில் தி.மு.க.,வும் வெற்றி பெற்றது. மாவட்ட ஊராட்சி குழு தலைவராக கண்ணதாசன், துணைத்தலைவராக தானேஷ் என்ற என். முத்துக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டசபை தேர்தலின் போது தானேஷ் என்ற முத்துக்குமார் ராஜினாமா செய்தார். இதனால், காலியான 8வது வார்டிற்கு கடந்த 9ம் தேதி தேர்தல் நடந்தது. அதில், தி.மு.க., வெற்றி பெற்றது.

மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தி.மு.க.,வை சேர்ந்த 4 உறுப்பினர்கள், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் வெளியே இருந்தனர்.


latest tamil news


இந்நிலையில், தேர்தல் அலுவலரான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட அலுவலர் மந்திராசலம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு, வெளியே செல்ல காரில் கிளம்பினார். அப்போது, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் மற்றும் அதிமுக.,வினர் , தேர்தல் அலுவலர் காரை முற்றகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கார் முன் அமர்ந்து மறியல் செய்ததுடன், எஸ்.பி., மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news



இதனையடுத்து விஜயபாஸ்கர், கண்ணதாசன், அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் உள்பட நூற்றுக்கணக்கானோரை தாந்தோணிமலை போலீசார் கைது செய்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
22-அக்-202118:00:26 IST Report Abuse
Sankar Ramu திமுக வின் அட்டொழியம் தாங்க முடியில. தோக்கும் இடத்தில தள்ளிவைத்து இழ்டத்துக்கு அதிகார பலம் காட்டுவது.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-அக்-202121:19:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்வேணும்னா இங்கேருந்து ஜெலுசில் அனுப்பட்டுமா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X