சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய குழுத்தலைவராக தி.மு.க., கவுன்சிலர் தேர்வு: முறைகேடு என தி.மு.க.,வினர் குற்றச்சாட்டு

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
திருப்பத்துார்: ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில், தி.மு.க.,வினர் தீக்குளிக்க முயன்ற போது செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேர்தல் இன்று நடந்தது. இங்கு 18 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தி.மு.க., 11, அ.தி.மு.க., 4, பா.ம.க., 2, சுயே., வேட்பாளர் ஒருவர் உள்ளனர். தி.மு.க., பெரும்பான்மை பெற்றிருந்தாலும், அக்கட்சியை
ஆலங்காயம், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், தேர்தல், திமுக, தள்ளு முள்ளு, தீக்குளிக்க முயற்சி

திருப்பத்துார்: ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில், தி.மு.க.,வினர் தீக்குளிக்க முயன்ற போது செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேர்தல் இன்று நடந்தது. இங்கு 18 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தி.மு.க., 11, அ.தி.மு.க., 4, பா.ம.க., 2, சுயே., வேட்பாளர் ஒருவர் உள்ளனர். தி.மு.க., பெரும்பான்மை பெற்றிருந்தாலும், அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களான சங்கீதா, காயத்திரி ஆகியோருக்கு இடையே தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. இதில், சங்கீதாவுக்கு 6 பேரும், காயத்திரிக்கு 4 பேரும் ஆதரவு தெரிவித்தனர். தலைவர் பதவி பெற 12 ஓட்டுக்கள் பெற வேண்டும் என்பதால், இரு தரப்பினரும் அ.தி.மு.க., பா.ம.க., கவுன்சிலர்களை நாடியதால் குதிரை பேரம் நடந்தது.


latest tamil news


கடந்த 20ம் தேதி பதவி ஏற்பு விழாவில், ஒரு கோஷ்டியினர் கவுன்சிலர்களை கடத்த முயன்ற போது போலீசார் தடியடி நடத்தினர். 21ம் தேதி அனைத்து கவுன்சிலர்களும் காணாமல் போய் விட்டனர். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. இதில் 12 ஓட்டுக்கள் பெற்று சங்கீதா வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக தி.மு.க., 5, அ.தி.மு.க., 4, பா.ம.க., 2, சுயே., கவுன்சிலர் ஓட்டு போட்டனர். இதனால் தி.மு.க., கவுன்சிலர்கள் 6 பேர் தேர்தலை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சங்கீதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதை கண்டித்து ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவுன்சிலர் காயத்திரி தலைமையில் 6 கவுன்சிலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது முறைகேடுகள் செய்து சங்கீதா பெற்ற வெற்றியை செல்லாது என அறிவித்து மீண்டும் தேர்தலை நடத்தக் கோரியும், சங்கீதா வெற்றிக்கு காரணமான செயல்பட்ட வேலுார் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்தை கண்டித்து கோஷமிட்டனர். ஆம்பூர் தி.மு.க., அமைப்பாளர் சத்திய திருநாவுக்கரசு, 40, என்பவர் தீக்குளிக்க முயன்ற போது போலீசார் தடுத்து அவரை கைது செய்தனர். இதனால் மேலும் 5 பேர் தீக்குளிக்க முயன்ற போது தடுத்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தி கலைத்தனர்.


latest tamil news


திருப்பத்துார் எஸ்.பி., பாலகிருஷ்ணன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பின்னர் மறு தேர்தல் நடத்தக் கோரி வாணியம்பாடி சப் கலெக்டர் காயத்திரியிடம் மனு கொடுத்தனர். அதன் பிறகு மாலை 4 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால் ஆலங்காயம் - ஜமுனாமரத்துார் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். திருப்பத்துார் மாவட்ட தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் காயத்திரி. இவர் ஜோலார்பேட்டை தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், திருப்பத்துார் மாவட்ட செயலாளருமான தேவராஜின் மருமகள்.


latest tamil news


சங்கீதா நீண்ட காலமாக தி.மு.க.,வின் மகளிர் அணி தலைவியாக பதவி வகிக்கிறார். அவருக்கு வேலுார் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்தின் ஆதரவு உள்ளது. இந்நிலையில் தலைவர் பதவிக்கு இருவரும் போட்டியிட்டனர். தன் மருமகளுக்கு தான் தலைவர் பதவியை தர வேண்டும் என தேவராஜி எம்.எல்.ஏ., கூறினார். சங்கீதாவுக்கு தான் தலைவர் பதவி என கதிர் ஆனந்த் எம்.பி., கராராக கூறிவிட்டார். இதனால் வேறு வழியின்றி குதிரை பேரம் நடத்தி, அ.தி.மு.க., பா.ம.க., சுயே., கவுன்சிலர்களின் ஆதரவோடு சங்கீதா வெற்றி பெற்றார். தலைவர் தேர்தலில் தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட செயலாளர் தேவராஜிக்கும், கதிர் ஆனந்த் எம்.பி.,க்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க., இப்பகுதியில் பிளவுபடும். இப்பிரச்னையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலையிட்டு சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
23-அக்-202115:54:15 IST Report Abuse
raja இதெல்லாம் நம்ப சட்ட கவரி மான் களுக்கும் தேர்தல் ஆணையத்துக்கு கண்டிப்பா தெரியவே தெரியாது.... எல்லாம் ஜனநாயக முறைப்படி நடந்ததுன்னு சொல்லுவாங்களே....
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
22-அக்-202120:26:07 IST Report Abuse
Balaji நல்லது நடந்தால் சரி.. ஹி ஹி..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
22-அக்-202119:58:35 IST Report Abuse
sankaseshan கோட்டைக்குள் குத்துவெட்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X