வங்கதேச ரோஹிங்கியா அகதிகள் முகாமில் துப்பாக்கிச்சூடு; 7 பேர் பலி

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
பலுகலி: வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் ஏழு பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மியான்மர் நாட்டில் 1982ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு மியான்மர் நாட்டு அரசு ஏழரை இலட்சம் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு
வங்கதேசம், ரோஹிங்கியா, அகதிகள்,துப்பாக்கிச்சூடு, பலி

பலுகலி: வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் ஏழு பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மியான்மர் நாட்டில் 1982ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு மியான்மர் நாட்டு அரசு ஏழரை இலட்சம் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றியது. இந்த அகதிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக வங்கதேசத்தில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே சொந்த நாடு இல்லாமல் தவிக்கும் பழங்குடி இனம் ரோஹிங்கியா இஸ்லாமிய பழங்குடி இனம் ஆகும்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தபோது நெரிசல் மிக்க முகாம்களில் அடைக்கப்பட்ட இந்த ரோஹிங்கியா அகதிகள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகினர். அவ்வப்போது இந்த முகாம்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவர்கள்மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் ஆகியோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில் சமீபத்தில் பலுகாலி முகாமில் மர்ம நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் 7 அகதிகள் பலியாகியுள்ளனர். இதுகுறித்து தற்போது வங்கதேச காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இந்த வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தி இருக்கலாம் என அகதிகள் சிலர் கருதுகின்றனர். ஆனால் அந்த பயங்கரவாத அமைப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. முகாம்களில் இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க வங்கதேச அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தற்போது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
23-அக்-202115:49:43 IST Report Abuse
raja அங்கேயும் மர்ம நபர்கலா...உசார் உடன்பிறப்பே... உன்னைப்போல ஒரு போலி உருவாகிறது...
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
22-அக்-202122:43:36 IST Report Abuse
Duruvesan இப்போ எல்லாம் வூளை idum, ஹிந்துக்கள் கொல்ல பட்ட போது எவனும் வூளை இடல
Rate this:
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
22-அக்-202121:12:27 IST Report Abuse
K.Muthuraj ரோஹிங்கியா மக்கள், கிழக்கு பாகிஸ்தான் என்று ஒரு நாடு உருவாக்க ஜின்னா முயற்சி செய்து கொண்டிருந்த பொழுது அன்றைய பர்மாவிலிருந்து தங்களை பிரித்து தங்கள் நாட்டுடன் சேர்த்து கொள்ளுங்கள் அல்லது தங்களுக்கு தனி நாடு ஏற்படுத்தி கொடுங்கள் என்று அவருக்கு தூது அனுப்பினர். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். (கிட்டத்தட்ட இன்றைய காஷ்மீர் போலவே.) ஆனால் என்னவோ அது நடைபெறவில்லை. இவர்கள் யாருடனும் இணக்கமாக வாழ மாட்டார்கள். ஆனால் அடுத்தவர்களின் வாழ்க்கை இவர்கள் கண்களை உறுத்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X