சேலம்: கூட்டுறவு வங்கியின் மாநிலதலைவர் இளங்கோவனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய ரெய்டு முடிந்தது. அதில் ரூ.29.77 லட்சம், 10 சொகுசு கார்கள், இரண்டு வால்வோ பஸ்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
![]()
|
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவராகவும், அதிமுக.,வின், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராகவும் உள்ளார். முன்னாள் முதல்வர் பழனிசாமியின் நிழலாகவும் உள்ளார். இளங்கோவன் அவரது மகன் பிரவீன் ஆகியோர் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக இன்று காலை 6 மணி முதல் இளங்கோவனின் வீடு, தோட்டம், அவருக்கு சொந்தமான துறையூரில் உள்ள வேளாண் கல்லூரி, பெட்ரோல் பங்க் உள்பட மொத்தம் 36 இடங்களில் சோதனை நடைபெற்றது.
![]()
|
ரூ.29.77 லட்சம் ரொக்கம் பறிமுதல்
அவரது வீட்டில் இருந்து ரூ29.77 லட்சம் ரொக்கம் 21.2 கிலோ தங்கம் 282 கிராம் வெள்ளி பொருட்கள் , 10 சொகுசுகார்கள், 2 வால்வோ சொகுசு பஸ்கள் மற்றும் 3 கணினி ஹார்டு டிஸ்க்குகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் வங்கி வைப்புத்தொகை ரூ.68 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை தொடர்ந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் இன்று (அக்.,23) நள்ளிரவு 12;10 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய ரெய்டு முடிவுக்கு வந்தது. .நேற்று, மதியம், 12:20 மணியளவில் துவங்கிய சோதனை, நள்ளிரவு, 12:10 மணியளவில் முடிந்தது. இவரது வீட்டில் மட்டும் தொடர்ந்து, 12 மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்த சோதனை முடிந்ததும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மூன்று பேக்குகளில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்து, எடுத்துச் சென்றனர்.
பத்திரிக்கையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்ததற்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் நன்றி தெரிவித்தனர்.