அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பெரிய கோவில்களோடு சிறு கோவில்கள் இணைப்பு'

Added : அக் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:''வருவாய் அதிகம் உள்ள கோவில்களோடு, வருவாய் குறைந்த கோவில்களை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரம், காசி விஸ்வநாதர், வேணுகோபால சுவாமி கோவில்களில், அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பின், அவர் அளித்த பேட்டி: உதயகிரி சாமைய்ய ஜமீன்தார் என்பவரின் மகன்
 'பெரிய கோவில்களோடு  சிறு கோவில்கள் இணைப்பு'

சென்னை:''வருவாய் அதிகம் உள்ள கோவில்களோடு, வருவாய் குறைந்த கோவில்களை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரம், காசி விஸ்வநாதர், வேணுகோபால சுவாமி கோவில்களில், அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பின், அவர் அளித்த பேட்டி: உதயகிரி சாமைய்ய ஜமீன்தார் என்பவரின் மகன் வெங்கைய்யா என்பவர், இந்த கோவிலுக்கு பூஜைகள், பராமரிப்பு பணிகளுக்காக, இரண்டு ஜமீன் கிராம நிலங்களை உயில் சாசனமாக, 177 ஏக்கர் இடத்தை, 1984ல் வழங்கி உள்ளார்.அதில், ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை மீட்டெடுக்க, அறநிலையத் துறை, வருவாய் துறையுடன் இணைந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தால் மனம் இலகுவாகும். ஆனால், இந்த கோவில் சிதிலடைந்து உள்ளதை கண்டு மனம் கனக்கிறது. எனவே, விரைவில் திருப்பணி நடத்தி கும்பாபிஷேகம் நடத்தப்படும். அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இக்கோவிலில் பிரசித்தி பெற்ற ருத்ராட்ச பந்தல் உடைந்துள்ளதால், அங்கு மூலவருக்கு அபிஷேகம் நடத்தப்படுவதில்லை. அது, விரைவில் சரி செய்யப்படும்.

வருவாய் குறைவாக உள்ள கோவில்கள், வருவாய் அதிகம் உள்ள கோவில்களோடு இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இந்த கோவிலுக்கு சொந்தமான, 177 ஏக்கர் இடத்தின் பெயரில் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளோம். சென்னை, 'குயின்ஸ் லேண்ட்' நிர்வாகத்திற்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு, அவர்கள் தரப்பில் இருந்தும் விளக்கம் தந்துள்ளனர். நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

அந்த நிலத்தை, அரசு மீட்கும் பணி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், காஞ்சிபுரம் மண்டல இணை கமிஷனர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
23-அக்-202114:05:19 IST Report Abuse
vpurushothaman இந்த இணைப்பு வேலைகள் ஆலயங்களிலுமா ?
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
23-அக்-202109:10:38 IST Report Abuse
 Muruga Vel எங்கியாவது மெரினா சமாதிகளையும் கோவில்களாக கருதி வருமானம் அதிகமிருக்கும் கோவில்களோடு இணைத்துவிட போகிறார்கள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X