பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 22, 2021
Share
Advertisement
அக்., 23, 1905தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில், 1905 அக்., 23ம் தேதி பிறந்தவர் அ.சீனிவாசராகவன். இயற்பெயர் பிச்சை.திருச்சி புனித ஜோசப், பாளையங்கோட்டை புனித சேவியர், நெல்லை ஹிந்து, சென்னை விவேகானந்தா கல்லுாரிகளில், ஆங்கிலத் துறை விரிவுரையாளராக பணியாற்றினார். 1951 முதல் 1969 வரை, துாத்துக்குடி வ.உ.சி., கல்லுாரி முதல்வராக பணியாற்றினார். 'சிந்தனை' என்ற இலக்கிய மாத இதழின் ஆசிரியராக

இதே நாளில் அன்று

அக்., 23, 1905

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில், 1905 அக்., 23ம் தேதி பிறந்தவர் அ.சீனிவாசராகவன். இயற்பெயர் பிச்சை.திருச்சி புனித ஜோசப், பாளையங்கோட்டை புனித சேவியர், நெல்லை ஹிந்து, சென்னை விவேகானந்தா கல்லுாரிகளில், ஆங்கிலத் துறை விரிவுரையாளராக பணியாற்றினார். 1951 முதல் 1969 வரை, துாத்துக்குடி வ.உ.சி., கல்லுாரி முதல்வராக பணியாற்றினார். 'சிந்தனை' என்ற இலக்கிய மாத இதழின் ஆசிரியராக செயலாற்றினார். தமிழ் இலக்கியச் சொற்பொழிவாளராக திகழ்ந்தார்.மார்கழி மாதம் முழுதும் அவர் ஆற்றிய திருப்பாவை, திருவெம்பாவை விளக்கங்கள் வானொலியில் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டன.
உமர் கய்யாம் பாடல்கள், ஆதிசங்கரரின் மநீஷாபஞ்சகம் உள்ளிட்டவற்றை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். கம்பன், பாரதியின் பல பாடல்களை, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் கவிதைக்கான முதல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர் என்ற பெருமை பெற்றார். போப் ஆண்டவர், இவருக்கு தங்கப் பதக்கம் அளித்து பாராட்டினார். 1975 ஜன., 5ம் தேதி தன் 70வது வயதில் காலமானார்.
அ.சீ.ரா., பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X