விவசாயிகள் போராட்ட பகுதியில் 'நிஹாங்' அமைப்பினர் வன்முறை

Updated : அக் 24, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சண்டிகர்:ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதியில் 'நிஹாங்' என்ற சீக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டனர்.ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சோனிபட் மாவட்டத்தின் குண்டலி பகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி
விவசாயிகள் போராட்டம்,'நிஹாங் ,  வன்முறை

சண்டிகர்:ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதியில் 'நிஹாங்' என்ற சீக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டனர்.

ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சோனிபட் மாவட்டத்தின் குண்டலி பகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சமீபத்தில் இங்கு, இரும்பு தடுப்பில் கை துண்டிக்கப்பட்டு, ரத்தம் கசிந்து காய்ந்த நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. அவர், பஞ்சாபை சேர்ந்த லக்பிர் சிங் என தெரிந்தது.

சீக்கியர்களின் புனித, 'குரு கிரந்த் சாகிப்' புத்தகத்தை அவமதித்த குற்றத்திற்காக அந்த நபரை 'நிஹாங்' என்ற சீக்கிய அமைப்பினர் கொன்றதும் தெரிந்தது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் நடக்கும் பகுதியில் மற்றொரு வன்முறை சம்பவம் நடந்துள்ளது.

சோனிபட்டில் கோழிப்பண்ணை ஒன்றில் பணியாற்றுபவர் மனோஜ் பஸ்வான். இருசக்கர வாகனத்தில் கோழிகளுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதி வழியாக சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது நிஹாங் அமைப்பைச் சேர்ந்தவர் போல உடையணிந்திருந்த ஒருவர், பஸ்வானை தடுத்து நிறுத்தினார். தனக்கு இலவசமாக கோழியை கொடுக்கும்படி பஸ்வானை அவர் மிரட்டினார்; பஸ்வான் மறுத்தார்.

ஆத்திரமடைந்த அந்த நபர், பஸ்வானை அடித்து, அவரது இடது காலை உடைத்தார். பஸ்வானின் சத்தம் கேட்டு வந்த போலீசார், அவரை தாக்கிய நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் நவீன் என்பதும், நிஹாங் அமைப்பை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-அக்-202105:21:06 IST Report Abuse
meenakshisundaram ஆஹா இந்த மாதிரி விவசாய்ங்க தான் நாட்டுக்கு தேவை வயலுக்கு போகாமலேயே விளைச்சலை காண்பிக்குறாங்களே அமெரிக்க மற்றும் ரஷ்யா அரசாங்கங்கள் தெரிந்தால் இவிங்களை அவங்க நாட்டுக்கே அழச்சுக்கிட்டு போய்டுவாங்க
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
23-அக்-202121:06:42 IST Report Abuse
GANESUN //போராட்டம் செய்யும் விவசாயிகளுக்கு உள்ளே அவர்களத்தை போராட்டத்தை வலுவிழக்க செய்ய // ஐ...ய்யோ..சுப்பர் அப்போ இது ரொம்ப லேட்டு..
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
23-அக்-202120:49:34 IST Report Abuse
M  Ramachandran PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X