தீர்ப்பாய நியமன விவகாரம் அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

Added : அக் 22, 2021
Share
Advertisement
புதுடில்லி:'தீர்ப்பாயங்கள் தேவையில்லை என மத்திய அரசு நினைத்தால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தையே அகற்றி விட வேண்டியது தானே' என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.நாடு முழுதும் உள்ள பல்வேறு மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதை, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து

புதுடில்லி:'தீர்ப்பாயங்கள் தேவையில்லை என மத்திய அரசு நினைத்தால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தையே அகற்றி விட வேண்டியது தானே' என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் உள்ள பல்வேறு மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதை, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. 'இந்த விவகாரத்தில் உடனடியாக நியமனங்கள் செய்யப்பட வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில், நியமனங்கள் செய்யப்பட்டு உள்ளதா என்பதை அறிய, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு மீண்டும் விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தீர்ப்பாயங்களுக்கான நியமனங்கள் செய்யப்பட்டு உள்ளனவா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்வதே துரதிர்ஷ்டவசமானது. பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா என்பதை அறிய எங்கள் அதிகார வரம்பை நீட்டித்து ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.இதில் நேரம் செலவிட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

உத்தரவை மதித்து நியமனங்கள் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அரசின் போக்கு வருத்தத்தை அளிக்கிறது.தீர்ப்பாயங்களே தேவையில்லை என அரசு நினைத்தால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தையே அகற்றிவிட வேண்டியது தான்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X