அமரீந்தர் தோழிக்கு ஐ.எஸ்.ஐ., தொடர்பு? பஞ்சாப் உள்துறை அமைச்சர் 'பகீர்' புகார்!

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சண்டிகர் : ''பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் தோழியான பாகிஸ்தான் பத்திரிகையாளர் அரோசா ஆலமுக்கு, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யுடன் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும்,'' என, பஞ்சாப் உள்துறை அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தாவா தெரிவித்துள்ளார்.பஞ்சாபில் முதல்வர் பதவியிலிருந்து கடந்த மாதம் விலகிய அமரீந்தர் சிங், புதிய கட்சி துவக்கி பா.ஜ.,வுடன் கூட்டணி
 அமரீந்தர் தோழிக்கு ஐ.எஸ்.ஐ., தொடர்பு? பஞ்சாப் உள்துறை அமைச்சர் 'பகீர்' புகார்!

சண்டிகர் : ''பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் தோழியான பாகிஸ்தான் பத்திரிகையாளர் அரோசா ஆலமுக்கு, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யுடன் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும்,'' என, பஞ்சாப் உள்துறை அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தாவா தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் முதல்வர் பதவியிலிருந்து கடந்த மாதம் விலகிய அமரீந்தர் சிங், புதிய கட்சி துவக்கி பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்; இது, காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அமரீந்தர் சிங்கை, காங்., தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில் பஞ்சாப் மாநில உள்துறை அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தாவா கூறியதாவது:அமரீந்தர் முதல்வராக இருந்தபோது, ஐ.எஸ்.ஐ.,யிடமிருந்து சவால்களை பஞ்சாப் எதிர்கொண்டு வருவதாக அடிக்கடி கூறுவார். பாகிஸ்தான் பத்திரிகையாளர் அரோசா ஆலம், அமரீந்தரின் நெருங்கிய தோழி. பஞ்சாப்புக்கு ஆலம் அடிக்கடி வந்து அமரீந்தரை சந்திப்பது வழக்கம்.

பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் 2017ல் பதவியேற்ற நிகழ்ச்சியில் ஆலம் பங்கேற்றார். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் ஆலம் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.மேலும், பாகிஸ்தானிலிருந்து பஞ்சாபுக்கு ஆளில்லா குட்டி விமானங்கள் அடிக்கடி வருவதாக அமரீந்தர் தொடர்ந்து கூறி வந்தார்.

அதனால் தான், பஞ்சாப் எல்லையின் பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். அமரீந்தர் தோழி ஆலமுக்கு ஐ.எஸ்.ஐ.,யுடன் நெருங்கிய தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறோம். இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போது தான் உண்மையை கண்டறிய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ravichandran - chennai,இந்தியா
23-அக்-202101:47:07 IST Report Abuse
r ravichandran பாட்டியாலா ராஜா பரம்பரையை சேர்ந்தவர் அம்ரிந்தர் சிங். ராணுவத்தில் கேப்டன் ஆக பணி புரிந்தவர். இது வரை ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாதவர். தனி கட்சி ஆரம்பித்து காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் ஆகிவிடுவார் என்று காங்கிரஸ் பயந்து போய் குற்றச்சாட்டு சொல்கிறது. ஆனால் பஞ்சாப் மக்களுக்கு அமரிந்தர் சிங் பற்றி நன்கு தெரியும்.
Rate this:
Cancel
22-அக்-202123:07:49 IST Report Abuse
பாலா ஹா ஹா ஹா, அவர் மூலமாக பாகிஸ்தான் ரகசியங்களை தெரிந்துகொள்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X