சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழனிசாமிக்கும் 'செக்!': அ.தி.மு.க., மீது தொடர்கிறது தாக்குதல்

Updated : அக் 23, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (23+ 19)
Share
Advertisement
அ.தி.மு.க.,வினர் மீது தி.மு.க., அரசு தாக்குதல் தொடுப்பது தொடர்கிறது. முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கும் 'செக்' வைக்கும் வகையில், அவரது நிழல் போல் செயல்பட்ட இளங்கோவனுக்கு வலை விரிக்கப்பட்டு உள்ளது. இளங்கோவன் உள்ளிட்ட, பழனிசாமியின் ஆதரவாளர்கள் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள் மற்றும் கூட்டாளிகள் அலுவலகம் என, 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனையில்
அ.தி.மு.க., ,தொடர்கிறது தாக்குதல், பழனிசாமி  செக்,

அ.தி.மு.க.,வினர் மீது தி.மு.க., அரசு தாக்குதல் தொடுப்பது தொடர்கிறது. முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கும் 'செக்' வைக்கும் வகையில், அவரது நிழல் போல் செயல்பட்ட இளங்கோவனுக்கு வலை விரிக்கப்பட்டு உள்ளது.

இளங்கோவன் உள்ளிட்ட, பழனிசாமியின் ஆதரவாளர்கள் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள் மற்றும் கூட்டாளிகள் அலுவலகம் என, 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனால், மற்ற 'மாஜி'க்களும் ஆடிப்போய் உள்ளனர்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது, சொத்து குவிப்பு வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.

அவர்களது பங்களாக்கள், பண்ணை வீடுகள், நட்சத்திர ஓட்டல், கல் குவாரிகள் என, 100க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.இதில் பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள், சொத்து ஆவணங்கள், வங்கி முதலீடுகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களில் முதலீடு உட்பட ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து, அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்தவர்கள் மற்றும் அவர்களின் பினாமிகளின் வீடுகளிலும் சோதனை நடத்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் பட்டியல் தயாரித்துள்ளனர்.

அந்த வகையில், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் வகையில், அவரது நிழல் போல் செயல்பட்டு வரும் சேலம் மாவட்ட புள்ளி இளங்கோவன் உள்ளிட்ட ஆதரவாளர்களுக்கு வலை விரிக்கப்பட்டது.அதன்படி, இளங்கோவன் உள்ளிட்ட முன்னாள் முதல்வரின் ஆதரவாளர்கள், நண்பர்கள், கூட்டாளிகள் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள் என, 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 6:00 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர்.


யார் இந்த இளங்கோவன்?சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே, புத்திர கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 57. சேலம் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர். சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலராகவும் உள்ளார்.அவரது மனைவி பானுரேகா; அரசு பள்ளி ஆசிரியை. மகன் பிரவீன் குமார், 27. மருமகள் மோனிகா, 25. இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார். பிரவீன் குமார், திருச்சி மாவட்டம் முசிறியில், சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாகியாக உள்ளார்.

சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவன், பல கோடி ரூபாய்க்கு அதிபதியாக ஆனது பலரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளது. இளங்கோவன், பிரவீன் குமார் சொத்து குவிப்பு தொடர்பாக, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:இளங்கோவன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தபோது, 2014 - 2020 ஆண்டுகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, தன் மற்றும் மகன் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.இளங்கோவனின் சொத்து மதிப்பு, 2014ல் 30 லட்சம் ரூபாய். 2020ல் அவரது சொத்து மதிப்பு 5.60 கோடி ரூபாய். மாத வருமானத்தின்படி அவரது சொத்து மதிப்பு 2.88 கோடி ரூபாய் மட்டுமே இருக்க வேண்டும். அவர், பதவி காலத்தில் 131 சதவீதம் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இதற்கு, அவரது மகன் பிரவீன் குமார் உடந்தையாக இருந்துள்ளார்.
இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.


300 ஏக்கரில் கல்லுாரிதிருச்சி மாவட்டம் முசிறியில், எம்.ஐ.டி., என்ற பாலிடெக்னிக் கல்லுாரியில், 2011 - 12ல் பங்குதாரராக சேர்ந்த இளங்கோவன், அதே கல்லுாரியை விலைக்கு வாங்கினார்.அ.தி.மு.க., ஆட்சிக்கு பின், 150 ஏக்கரில் வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி; 100 ஏக்கரில் வேளாண் டிப்ளமா கல்லுாரி மற்றும் 60 ஏக்கரில் மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் என, 300 ஏக்கருக்கு மேல், கல்வி நிலையங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நிலம் வாங்கிய விதம், அதற்கான வருவாய் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில், இளங்கோவன், பிரவீன் குமார், அவரது உறவினர்களின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள் மற்றும் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்களின் வீடு, அலுவலகம் என, சேலம் 23; திருச்சி மாவட்டம், முசிறி 6; சென்னை 3; நாமக்கல் 3; கோவை 1 என, 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.


பணம், தங்கம், கார்கள்இதில், 30 லட்சம் ரூபாய் ரொக்கம், 10 சொகுசு கார்கள், 2 'வால்வோ' சொகுசு பஸ், 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், 68 லட்சம் ரூபாய் வங்கி வைப்புத்தொகை மற்றும் 3 கணினி 'ஹார்டு டிஸ்க்' மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.இளங்கோவன் சென்னையில் இருந்ததால், சொந்த ஊரில் உள்ள அவரது 'சொகுசு' வீடு பூட்டப்பட்டிருந்தது. மதியம் 12:20 மணியளவில் காரில் வீட்டிற்கு சென்றார். வீட்டில், 'சென்சார்' பொருத்தப்பட்டு இருந்ததால், அவரது கைரேகை பதிவு செய்த பின் கதவு திறந்தது.அதன்பின், இரண்டு அடுக்கு மாடியில் உள்ள ஆறு அறைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். முன்னதாக, அவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் நான்கு போலீசார் ஆய்வு செய்தனர். ஆடு, மாடுகள், ஜல்லிக்கட்டு விழா பரிசு பொருட்கள், கிரானைட் கற்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

அதேபோல், இளங்கோவனின் மாமனார் ராமமூர்த்தி, அக்கா ராஜகுமாரி, உறவினர் ஜெயராமன்; தொழில் நண்பரான, உமையாள்புரம் தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் வரதராஜனின், 'நிவேதா எலக்ட்ரிக்கல்' கடை மற்றும் வீடு; புத்திர கவுண்டன்பாளையத்தில் உள்ள ஈஸ்வர் நகைக்கடை உரிமையாளர் அசோக் குமார் வீடு, கடை ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.

வாழப்பாடியைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி குபேந்திரனின் கே.கே., நகைக்கடை மற்றும் வீடு; மின்னாம்பள்ளியில் உள்ள அ.தி.மு.க., இளைஞர் பாசறை மாவட்ட செயலர் ராஜராஜசோழன் வீடு; ஆத்துார் நகர செயலர் மோகன் மற்றும் அவரது தங்கை உமாசங்கரி வீடுகள்; ஆத்துார் சேகோ ஆலை உரிமையாளர் சதாசிவம்; தம்மம்பட்டி பேரூர் செயலர் குமரன் வீட்டிலும் சோதனை நடந்தது.

முசிறியில் உள்ள அவரது மகன் பிரவீன் குமாருக்கு சொந்தமான கல்லுாரி, அறக்கட்டளை அலுவலகம், சேலத்தில் உள்ள இளங்கோவனின் ஆடிட்டர் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டனர்.இளங்கோவனின் வீட்டில் சோதனை செய்ய, போலீசார் வந்தது குறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ.,க்கள் ஆத்துார் ஜெயசங்கரன், ஏற்காடு சித்ரா, சேலம் தெற்கு பாலசுப்ரமணி, ஒன்றிய, நகர செயலர்கள் உட்பட ஏராளமானோர், வீட்டின் முன் குவிந்தனர்.'லஞ்ச ஒழிப்பு போலீசார் வாயிலாக முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., மீது தொடர் தாக்குதல் நடத்துகிறார்' எனக் குற்றஞ் சாட்டினர்.- நமது நிருபர் குழு -


10 மணி நேரம் சோதனை!ஆத்துார், தம்மம்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க., பேரூர் செயலர் குமரன். இளங்கோவனுடன் நெருக்கமாக உள்ள நிர்வாகி என்பதால், குமரன் வீட்டில் நேற்று காலை 6:30 மணிக்கு, அரியலுார் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., சந்திரசேகர் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். மாலை 4:30 மணிக்கு சோதனையை முடித்தனர். அதில் வீடு, கடை, நிலம் தொடர்பான சொத்து ஆவணங்களை ஆய்வு செய்து, இளங்கோவனுடன் உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பினர்.


தற்கொலை முயற்சிஇளங்கோவன் வீடு உட்பட 36 இடங்களில் நடத்திய சோதனையை கண்டித்து, அக்கட்சியின், ஏத்தாப்பூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் குப்பன், 55, புத்திர கவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் சாலையில் அமர்ந்து, தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்.
தொடர்ந்து, அவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.


'எந்த பயமும் இல்லை'இளங்கோவன் கூறுகையில், ''தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இந்த சோதனை எதிர்பார்த்தது தான். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்துவதால் எனக்கு எந்த பயமும் இல்லை. தி.மு.க.,வின் இச்செயல் கண்டு அஞ்சப் போவதில்லை. நான் கட்டிய புதிய வீடு, வங்கியில் 3.20 கோடி ரூபாய் கடன் பெற்று தான் கட்டியுள்ளேன்,'' என்றார்.


'அ.தி.மு.க.,வை அழிக்கும் முயற்சி!'எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிக்கை:சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலர் இளங்கோவன் வீடு, தோட்டம், அவரது உறவினர்கள், கட்சியினர் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பெயரில், தி.மு.க., அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கண்டனத்துக்கு உரியது.இளங்கோவனின் செயல்பாடுகளை முடக்க, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தி.மு.க., அரசு சோதனை நடத்துவதை கண்டிக்கிறோம்.எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட அ.தி.மு.க., பல சோதனைகளை தாண்டி, வெற்றி நடை போடும் இயக்கமாக உள்ளது. இதை அழிக்க நினைக்கும் தி,மு.க., அரசின் முயற்சி, கட்சி தொண்டர்களின் ஆசியுடன் முறியடிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (23+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
23-அக்-202117:59:14 IST Report Abuse
Anantharaman Srinivasan எல்லாம் இன்பமயம். சாரி ஊழல் மயம். ஊழல் செய்தவனை ஊழல் செய்து மாட்டிகொள்ளாதவன் நோண்டும் வினோத நடவடிக்கை..
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
23-அக்-202115:47:00 IST Report Abuse
ராம.ராசு "ஊழல் செய்தவர்களின் மீது ஒரு அரசுத் துறை நடவடிக்கை எடுக்கிறது என்றால், அது எப்படி அ.தி.மு.க.,வினர் மீது தி.மு.க., அரசு தாக்குதல் தொடுப்பது என்பதாகும்?
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
23-அக்-202115:01:52 IST Report Abuse
Sathyanarayanan Subramanian திருட்டு திமுக விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் கில்லாடிகள். ஆனால் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஊழலில் இருந்து தப்பிக்க விஞ்ஞான அறிவு வேண்டும்
Rate this:
ராம.ராசு - கரூர்,இந்தியா
24-அக்-202116:59:20 IST Report Abuse
ராம.ராசு அது என்ன விஞ்ஞான ரீதியாலான ஊழல்? விஞ்ஞானம் என்பது திமுகாவிற்கு மட்டுமே தெரியுமா? அல்லது நீதிமன்றத்திற்கு விஞ்ஞான ரீதியிலான ஊழலை விசாரிக்கத் தெரியாதா? திமுகவினர் மீதான ஊழலை முறையாக நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லத் தெரியவில்லை அல்லது வெறும் ஊழல் குற்றச்சாட்டு மட்டுமே வைக்கப்படுவதால், குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை. அப்படித்தானே சொல்ல வேண்டும்? பத்து வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்த கட்சி அதிமுக. மத்தியில் இருக்கும் கட்சியோடு கூட்டணி வேறு. திமுகாவினர் மீதான குற்றச்சாட்டை நிரூபித்து தண்டனை பெற்றுத் தந்து இருக்கவேண்டும். அதற்க்கு போதுமான திறமையில்லாமல், விஞ்ஞான ரீதியில் குற்றம் செய்ததாக சப்பைக் கட்டுவது அபத்தமானது. முந்தைய திமுக தலைமை மீது ஊழல் குற்றச் சாட்டுக்காக எந்த நீதிமன்றமும் தண்டனை கொடுக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த முன்னாள் அதிமுக தலைமை நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு சிறை தண்டனையும் கொடுக்கப்பட்டது. தனி நீதிமன்றம், உயர் நீதிமன்றம். பிறகு உச்ச நீதி மன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் திமுக மீது விஞ்ஞான ரீதியில் ஊழல் என்று குற்றச்சாட்டு வைப்பது நாட்டின் அரசியல் சட்டத்தையே அவமதிப்பது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது ஊழல் செய்தால்... அதை வெளியே கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்து, உண்மையை நிரூபித்து தணடனை வாங்கித் தருவதுதான் அடுத்து வரும் கட்சியின் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என்பதற்காக, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாதே. '...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X