பொது செய்தி

இந்தியா

மும்பை மாநகராட்சியிடம் இருப்பு ரூ 82 ஆயிரம் கோடி

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மும்பை-மும்பை மாநகராட்சிக்கு வருவாய் குறைந்தும், 82 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வங்கிகளில் நிலையான வைப்புத் தொகையை வைத்துள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பி.எம்.சி., எனப்படும் பெருநகர மும்பை மாநகராட்சி, நாட்டின் மிகப் பணக்கார மாநகராட்சியாக

மும்பை-மும்பை மாநகராட்சிக்கு வருவாய் குறைந்தும், 82 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வங்கிகளில் நிலையான வைப்புத் தொகையை வைத்துள்ளது.



latest tamil news


மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பி.எம்.சி., எனப்படும் பெருநகர மும்பை மாநகராட்சி, நாட்டின் மிகப் பணக்கார மாநகராட்சியாக விளங்குகிறது.இந்நிலையில், இந்த ஆண்டு இதன் வருவாய் குறைந்தபோதும், வங்கிகளில் அதற்குள்ள நிலையான வைப்புத் தொகையின் அளவு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.


latest tamil news


மும்பை மாநகராட்சிக்கு 82 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நிலையான வைப்புத் தொகை உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட அதிகமாகும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், 343 நிலையான வைப்புத் தொகை கணக்குகளை மும்பை மாநகராட்சி நிர்வகித்து வருவதாகவும், அதன் வாயிலாக ஆண்டுக்கு 1,800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வட்டி பெறுவதும் தெரிய வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
23-அக்-202111:30:14 IST Report Abuse
Rasheel சிவ சேனா, கூட்டணி சரத் பவர், மற்றும் காங்கிரஸ்க்கு கொண்டாட்டம். கூட்டு சேர்ந்து திட்டம் போட்டு ஏப்பம் விடலாம். மும்பை இவளவு பணம் இருந்து கூட மிக மோசமாக பராமரிக்கப்படும் நகரம். மழைaa களங்களில் வெள்ளம் முதல் மாடியை தாண்டி ஓடுகிறது,
Rate this:
Cancel
NARAYANAN - Chennai,இந்தியா
23-அக்-202110:03:37 IST Report Abuse
NARAYANAN Like this, why not other states are not declaring their assets? Honestly.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X