'கொல்லப்பட்டவர்கள் இந்து அல்லாதோராக இருந்தால் ராகுல் துக்கம் அனுசரித்து இருப்பார்' - மத்திய அமைச்சர் கிண்டல்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
டில்லி: காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் இந்து அல்லாதோராக இருந்தால் ராகுல் துக்கம் அனுசரித்திருப்பார் என பாஜ., மத்திய அமைச்சர் கிரிராஜ் கிண்டல் செய்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னதாக பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வெளிமாநில தொழிலாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பலியாகினர். இச்சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி

டில்லி: காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் இந்து அல்லாதோராக இருந்தால் ராகுல் துக்கம் அனுசரித்திருப்பார் என பாஜ., மத்திய அமைச்சர் கிரிராஜ் கிண்டல் செய்துள்ளார்.



latest tamil news


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னதாக பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வெளிமாநில தொழிலாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பலியாகினர். இச்சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. தற்போது பாஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்க் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் பலியான அனைவரும் இந்துக்கள். இதுவே இந்து அல்லாத வேற்று மதத்தினர் யாராவது துப்பாக்கிச்சூட்டில் பலியாகி இருந்தாலும் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களான ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் இதனை வைத்து அரசியல் செய்ய முயற்சி செய்து இருப்பர்.

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் இந்துக்கள் என்ற காரணத்தால் ராகுல், பிரியங்கா ஆகியோர் ஜம்மு-காஷ்மீர் மாகாணத்துக்கு சென்று பலியானவர்களுக்கு குடும்பங்களை விசாரித்து அரசியல் ஆதாயம் தேடவில்லை. லக்கிம்பூர் கெரி விவகாரத்தில் சீக்கிய விவசாயிகள் படுகொலையின்போது ராகுல், பிரியங்கா அவர்களது குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூறினர். இதுவே இவர்களது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிக்கான உதாரணம் என்று கிரிராஜ் விமர்சித்துள்ளார்.


latest tamil news


கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் துர்சம்பவங்களில் பலியானவர் குடும்பங்களை விசாரிப்பதை ஓர் அரசியல் சுற்றுலாபோல காங்கிரஸார் கருகிவருவதாகவும் கிரிராஜ் மேலும் தெரிவித்தார். அரசியல் சுற்றுலா, அனுதாபம் பெறுவது, அரசியல் ஆதாயம் தேடுவது உள்ளிட்ட மூன்றையும் நம் நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டுவருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
23-அக்-202119:39:49 IST Report Abuse
Vena Suna போதை ஆளையும் பிரியாணி ஆளையும் கேட்டு பிரயோஜனம் இல்லை.
Rate this:
Cancel
23-அக்-202114:25:36 IST Report Abuse
பேசும் தமிழன் உண்மையும் அது தான்...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
23-அக்-202113:50:34 IST Report Abuse
raja என்ன செய்யிறது கொடுத்து இருக்கிற டூல் கிட்டு படிதானே நடக்க முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X