வங்கதேச வன்முறைக்கு காரணமானவர் கைது| Dinamalar

வங்கதேச வன்முறைக்கு காரணமானவர் கைது

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (12)
Share
டாக்கா-வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான வன்முறைக்கு காரணமானவரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் சமீபத்தில் மதவெறிக் கும்பல்கள் ஹிந்துக்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தின. ஹிந்துக்களுக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 66 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. நாட்டின் பல பகுதிகளில் ஹிந்து கோவில்கள்

டாக்கா-வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான வன்முறைக்கு காரணமானவரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.latest tamil news


நம் அண்டை நாடான வங்கதேசத்தில் சமீபத்தில் மதவெறிக் கும்பல்கள் ஹிந்துக்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தின. ஹிந்துக்களுக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 66 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. நாட்டின் பல பகுதிகளில் ஹிந்து கோவில்கள் சூறையாடப்பட்டன. சாமி சிலைகளை உடைத்து, துர்கா பூஜை விழாவை வன்முறைக் கும்பல் சீர்குலைத்தது. இந்த வன்முறையில் ஏழு பேர் உயிரிழந்தனர்.சமூக ஊடகத்தில் மத உணர்வை துாண்டும் செய்தி பரவியது தான் இந்த வன்முறைக்கு காரணம் என, கூறப்படுகிறது

.இந்நிலையில் ஹிந்துக்கள் மீதான வன்முறைக்கு காரணமான இக்பால் உசேன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து கொமில்லா மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ரபிக்குல் இஸ்லாம் கூறியதாவது:வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பாக இக்பால் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொமில்லாவில் உள்ள கோவிலில், துர்கா பூஜையின் போது இஸ்லாமியர்களின் புனித குரான் நுாலை ரகசியமாக வைத்துள்ளார். இது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகிஉள்ளது. அதன் அடிப்படையில் இக்பால் உசேன் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


இதற்கிடையே, மன நிலை சரியில்லாத இக்பால் உசேனை, பகடைக் காயாக மத வெறியர்கள் பயன்படுத்திக் கொண்டதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.இடைத் தேர்தலில் எதிரொலிக்கும்வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை, அதன் எல்லையை ஒட்டியுள்ள நம் நாட்டின் மேற்கு வங்கத்தில், வரும் 30ம் தேதி நடக்க உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தின்ஹடா, சன்டிபுர், கேசபா, கர்தா ஆகிய நான்கு தொகுதிகளில், ஹிந்துக்களின் ஓட்டுகளை கவர பா.ஜ., தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X