இந்தியா

'டுவிட்டர்' அதிகாரிக்கு சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்'

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021
Share
Advertisement
புதுடில்லி;'டுவிட்டர்' சமூக வலைதள நிறுவனத்தின், இந்திய பிரிவு முன்னாள் நிர்வாக இயக்குனர் மகேஷ்வரிக்கு, சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள காஜியாபாதில் ஒரு முஸ்லிம் பெரியவரை சில இளைஞர்கள் தாக்கியதாகவும், அவரை, 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட வற்புறுத்தியதாகவும்
'டுவிட்டர்' அதிகாரிக்கு சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்'

புதுடில்லி;'டுவிட்டர்' சமூக வலைதள நிறுவனத்தின், இந்திய பிரிவு முன்னாள் நிர்வாக இயக்குனர் மகேஷ்வரிக்கு, சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள காஜியாபாதில் ஒரு முஸ்லிம் பெரியவரை சில இளைஞர்கள் தாக்கியதாகவும், அவரை, 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட வற்புறுத்தியதாகவும் 'வீடியோ' வெளியானது.
இதை சிலர் டுவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மத மோதலை ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக, டுவிட்டர் நிறுவனத்தின் மீது காஜியாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக நேரில் ஆஜராகும்படி, டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குனராக இருந்த மணிஷ் மகேஷ்வரிக்கு 'சம்மன்' அனுப்பப்பட்டது.


latest tamil news


இதை எதிர்த்து, கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த மகேஷ்வரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சம்மனை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, அமெரிக்காவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு ஆகஸ்டில் மகேஷ்வரி மாற்றப்பட்டார். கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உத்தர பிரதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி ரமணா தலைமையில் நீதிபதிகள் சூர்யகாந்த், ஹீமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக டுவிட்டரின் முன்னாள் இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர் மகேஷ்வரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X