இந்தியா

பெண் ராணுவ அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில்: நிரந்தர கமிஷனில் 39 பேரை சேர்க்க கோர்ட் உத்தரவு

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : ராணுவத்தைச் சேர்ந்த 39 பெண் அதிகாரிகள், தங்கள் பணி தொடர்பான உரிமைப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை ஏழு நாட்களுக்குள் ராணுவ நிரந்தர கமிஷனில் சேர்க்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராணுவத்தில் நிரந்தர கமிஷனில் ஓய்வு காலம் வரை பணியாற்றலாம். அதேசமயம் குறுகியகால சேவை கமிஷனில் 10 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். அதன்
பெண் ராணுவ அதிகாரிகள், நிரந்தர கமிஷன், 39 பேர் ,

புதுடில்லி : ராணுவத்தைச் சேர்ந்த 39 பெண் அதிகாரிகள், தங்கள் பணி தொடர்பான உரிமைப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை ஏழு நாட்களுக்குள் ராணுவ நிரந்தர கமிஷனில் சேர்க்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தில் நிரந்தர கமிஷனில் ஓய்வு காலம் வரை பணியாற்றலாம். அதேசமயம் குறுகியகால சேவை கமிஷனில் 10 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். அதன் பின் ஓய்வு பெறலாம் அல்லது நிரந்தர கமிஷனில் சேர்க்கக் கோரி விண்ணப்பிக்கலாம்.


latest tamil news



இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்பட்சத்தில் மேலும் நான்கு ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெறலாம். இதன்படி ராணுவத்தின் குறுகியகால சேவை கமிஷனில் இடம் பெற்றிருந்த 71 பெண் அதிகாரிகள், தங்களை நிரந்த கமிஷனில் சேர்க்கக் கோரி விண்ணப்பித்தனர்.
அவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

'இந்த வழக்கில் 39 பேர் மட்டுமே நிரந்தர கமிஷனில் சேரத் தகுதியுடையவர்கள்; ஏழு பேர் மருத்துவ தகுதியை இழந்தவர்கள்' என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 25 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் ராணுவ அதிகாரிகள் சார்பில் வழக்கறிஞர்கள் வி.மோகனா, உசபா அஹமாதி, மீனாட்சி அரோரா ஆகியோர் ஆஜராகி வாதாடியதாவது:

உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச்சில் குறுகிய கால சேவை கமிஷனில் உள்ள அனைத்து பெண் ராணுவ அதிகாரிகளையும், நிரந்தர கமிஷனில் சேர்க்க உத்தரவிட்டது. அதற்கு மாறாக 25 பேரை நிரந்தர கமிஷனில் சேர்க்க தகுதியற்றவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது; இது, பாரபட்சமான நடவடிக்கை. இவ்வாறு அவர்கள் வாதாடினர்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மத்திய அரசு, 39 பெண் ராணுவ அதிகாரிகளை ஒரு வாரத்திற்குள் நிரந்தர கமிஷனில் சேர்க்க வேண்டும். எந்த அடிப்படையில் 25 பேர் தகுதியற்றவர்கள் என்பதை விரிவாக விளக்கி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அத்துடன், வழக்கில் தீர்ப்பு கூறும்வரை எந்த பெண் அதிகாரியையும் பணியில் இருந்து விலக்கக் கூடாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
23-அக்-202106:31:27 IST Report Abuse
GMM 'ராணுவ விவகாரங்களில் (Military Court, Defence Audit இருப்பதால்) நீதிமன்றங்கள் தலையிடுவதை மத்திய அரசு நிர்வாகம் விரும்பவில்லை' என்ற ஒரே வரியில் பதில் தாக்கல் செய்து முடிப்பது நல்லது. IAS, IPS, வழக்கறிஞர், நீதிபதி போன்ற பதவியில் இருப்பவர் தேசிய நலனுக்கு வெளியே தனி கொள்கை (இடது சாரி, வலது சாரி, சோசலிசம்) வகுத்து செயல்பட துவங்கிவிடனர். (SSC) பெண் அதிகாரிகள் வழக்கு பதிவு தவறு. எதிரியை உற்சாக படுத்தும். எதிரிகள் பணி குறையுடைய அதிகாரியை அடையாளம் கண்டு மூளை சலவை செய்து விடுவர். பாதுகாப்பு கருதி, கோர்ட் உத்தரவு போடும் அதிகாரம் இருக்க கூடாது. நிரந்தர கமிசனில் சேர்க்க இது சிவில் பணி அல்ல. கட்சி அரசு, நிர்வாக, நீதிமன்ற தவறின் ஆரம்பம்.
Rate this:
23-அக்-202120:02:08 IST Report Abuse
Vittalanandஉண்மையே. சரிசமமாக ஆண்களுடன் லென் அதிகாரிகள் போர் முனையில் நிற்க முடியாது. இயற்கை உபாதை களை திறந்த வெளியில் ஆண்களுக்கு முன் கழிக்க முடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X