அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை உஷ்ஷ்ஷ்: இலை கட்சியில் போர்க்குரல்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
இலை கட்சியில் போர்க்குரல்இலைக் கட்சியில், தலைமை பதவியில் உள்ளவர், ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிகளையும்; அடுத்தவர் இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலர் பதவிகளையும், தங்கள் வசம் வைத்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பலரும், இரண்டுக்கும் மேற்பட்ட பதவிகளை வைத்து உள்ளனர். கட்சியில் பதவிக்காக பலரும் காத்திருக்க, முன்வரிசை தலைவர்கள், பல பதவிகளை கையில்
தமிழகம், அரசியல், சென்னை, உஷ்


இலை கட்சியில் போர்க்குரல்



இலைக் கட்சியில், தலைமை பதவியில் உள்ளவர், ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிகளையும்; அடுத்தவர் இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலர் பதவிகளையும், தங்கள் வசம் வைத்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பலரும், இரண்டுக்கும் மேற்பட்ட பதவிகளை வைத்து உள்ளனர். கட்சியில் பதவிக்காக பலரும் காத்திருக்க, முன்வரிசை தலைவர்கள், பல பதவிகளை கையில் வைத்துள்ளனர்.

இது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்திய நிலையில், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், 'கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். சைதை துரைசாமி, ஜெ.சி.டி.பிரபாகரன், பாலகங்கா போன்றோருக்கு முக்கிய பதவிகளை தாருங்கள்' என 'கொளுத்தி'ப் போட்டுள்ளார்.இதற்கு, கட்சியினரிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதைத் தொடர்ந்து, பதவி இல்லாமல் தவிக்கும் 'மாஜி'க்கள், தங்களுக்கு பதவி வேண்டும் என, தலைமையை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே, விரைவில் இலைக் கட்சியில் பதவிக்காக குரல் ஒலிக்குமாம்.


latest tamil news



மகனுக்காக ஓட்டெடுப்பு!

தன்னுடைய மகனுக்கு கட்சியில் தலைமை நிலைய செயலர் பொறுப்பு வழங்குவதற்கு முன், கட்சிக்குள் புகைச்சல் இருப்பதை உணர்ந்து கொண்டார் வைகோ. இருந்த போதும், கட்சியினர் ஒப்புதலோடு இதை செய்ய முடிவெடுத்தவர், இதற்காகவே, மா.செ.,க்கள், உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள், அரசியல் ஆய்வுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.

கூட்டம் துவங்கியதும் பேசிய வைகோ, 'ம.தி.மு.க., தொடங்கி இத்தனை ஆண்டுகளில் துரை, கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தது கிடையாது. அதற்கு காரணம் நான் தான். அதையும் மீறி, கட்சிக்கு தேவை இருப்பதாக, இன்றைக்கு பலரும் என்னை வற்புறுத்துகின்றனர். 'வேறு வழியின்றி உங்கள் ஒவ்வொருவர் கருத்தையும் கேட்டு முடிவெடுக்க உள்ளேன்.

அதற்காக, இங்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில், உங்கள் ஓட்டுகளை ஆதரவாகவோ, எதிரா கவோ அளிக்கலாம்' என சொல்லி இருக்கிறார். பின் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில், துரைக்கு ஆதரவாக, 104 நிர்வாகிகளும், எதிராக இருவரும் ஓட்டளித்தனர். பெருவாரியான ஆதரவு துரைக்கு இருப்பதை தொடர்ந்து, அவருக்கு தலைமை நிலைய செயலர் பொறுப்பு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


ஆளும் கட்சி சங்கத்துக்கே தடை!

அரசின் சார்பில், 200 கோடி ரூபாயில், இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு, ஆசிரியர் சங்கங்களிடம் ஒத்துழைப்பு கோரி, சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'இந்த திட்டத்துக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது. தன்னார்வலர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் வழங்கலாம். ஓய்வுபெற்ற ஆசிரியர்களை தன்னார்வலர்களாக்கலாம். 'ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். சிபாரிசு இன்றி நியமனம் செய்ய வேண்டும்' என்றனர்.

பதிவு செய்த வரிசைப்படி, ஆளுங்கட்சியைச் சேர்ந்த, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் பேச எழுந்த போது, அவருக்கு 'மைக்' தராமல், 'பின்னர் பேசலாம்' என, இயக்குனர் அறிவொளி கூறினார். இதனால், அந்த சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர். ஆளும் தி.மு.க.,வுக்கு ஆதரவான சங்க நிர்வாகிகள், கல்வி துறை கூட்டத்தில் பேச தடை விதித்தது, ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கம், 'பரவாயில்லையே... ஆளுங்கட்சிக்கு சார்பா நடப்பதைத் தவிர்க்கிறாங்களே...' என பாராட்டும் எழுந்தது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-அக்-202107:02:54 IST Report Abuse
Bhaskaran ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கிராமப்புறங்களில் ரொம்ப நல்லா சேவை செய்யறாங்களா .வேலையில்லாமல் இருக்கும் படித்த ilaingargal இடம் இந்த பணியைக்கொடுக்கலாமே
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-அக்-202119:49:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இலை இல்லாமல் போவது தமிழ்நாட்டுக்கு ஆபத்து.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
23-அக்-202117:48:14 IST Report Abuse
jagan ஆபீசுக்கே வராதவன் இப்போ தலைவர். இவர் மத்தவங்களை சொல்லுறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X