தமிழ்நாடு

50 ஆயிரம் மையங்களில் இன்று 'மெகா' தடுப்பூசி முகாம்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021
Share
Advertisement
சென்னை ;உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்த, தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் இன்று, 'மெகா' தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்க, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில், மெகா தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி
 50 ஆயிரம் மையங்களில்  இன்று 'மெகா' தடுப்பூசி முகாம்

சென்னை ;உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்த, தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் இன்று, 'மெகா' தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்க, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில், மெகா தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். அதன்படி, மெகா தடுப்பூசி முகாம்களில் மட்டும், ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தாண்டில் ஜன., 16ம் தேதி முதல் இதுவரை, 5.16 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


latest tamil news




இந்நிலையில், அசைவம் சாப்பிடுபவர்கள், தடுப்பூசி போட தயங்குவதால், ஞாயிற்றுக் கிழமைக்கு பதிலாக, சனிக் கிழமைக்கு முகாம் மாற்றப்பட்டுள்ளது.எனவே, மாநிலம் முழுதும், 50 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாமை இன்று அரசு நடத்துகிறது. இதில், இரண்டாம் தவணை காலம் முடிந்தும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத, 57 லட்சம் பேருக்கு முன்னுரிமை அளித்து, தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழக அரசிடம் 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த கொள்ள வேண்டியவர்கள் 57 லட்சம் பேர் இருக்கின்றனர். 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் முகாம்களை, இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்கள் பயன்படுத்த வேண்டும்.
உலகம் முழுதும் தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து செல்கிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 75 ஆயிரமாகவும், பிரிட்டனில், 45 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளன. சீனாவில் விமான நிலையங்களும், கல்வி நிலையங்களும் மூடப்
பட்டுள்ளன. எனவே, சுணக்கம் காட்டாமல், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இரண்டாம் தவணை செலுத்த வேண்டிய 57 லட்சம் பேரும் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும். அப்போது தான், முழுமையான நோய் எதிர்ப்பு திறன் உருவாகும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X