பொது செய்தி

இந்தியா

பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டம்; ஜம்மு காஷ்மீரில் அதிரடி சோதனை

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி-லஷ்கர் - இ -தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் நாட்டின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஜம்மு - காஷ்மீரின் பல இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய

புதுடில்லி-லஷ்கர் - இ -தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் நாட்டின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.



latest tamil news


இதையடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஜம்மு - காஷ்மீரின் பல இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் பொதுமக்கள்பலர், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதனால் பொதுமக்களிடையே பீதி நிலவி வருகிறது. இதையடுத்து, பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.


latest tamil news


இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் ஐ.ஜி., விஜய குமார் கூறுகையில், ''கடந்த இரண்டு வாரங்களில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு அதிகாரிகள் அக்., 13ல் நடத்திய சோதனையில், ஸ்ரீநகரில் ஐந்து பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர்,'' என்றார். இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீர் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-அக்-202110:43:23 IST Report Abuse
பேசும் தமிழன் நாட்டுக்கு எதிராக பேசுபவர்கள். செயல்படுபவர்கள்... இந்த நாட்டுக்கு பாரம்... அவர்கள் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் ஒன்றே.... அவர்கள் மீது மென்மையான அணுகுமுறை பார்க்காமல் சுட்டு தள்ள வேண்டும்
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
23-அக்-202109:36:48 IST Report Abuse
தியாகு இஸ்ரேல் சிகிச்சைதான் மூர்க்கர்களுக்கு சரிவரும். இஸ்ரேலின் ஒரு ராணுவ வீரரை கொன்றால் பதிலுக்கு எதிரிகள் 10 பேரையாவது துவம்சம் செய்யும் இஸ்ரேல். அதுபோல காஸ்மீரிலும் தொடர்ந்து நடந்தால்தான் பக்கிகள் வாலை சுருட்டி பின்னாடி ஓடுவானுங்க.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-அக்-202104:03:08 IST Report Abuse
மலரின் மகள் இஸ்ரேலிடமிருந்து பெறப்பட்ட ட்ரோன்களால் முழுதும் கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறது காஸ்மீரம். இருபக்கத்திலிருக்கும் காசுமீரும் முழுதும் அங்குலம் அங்குலமாக கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஏதேனும் அசம்பாவிதங்களை செய்தால் அவர்கள் நிர்மூலம் செய்யப்படுவார்கள். அச்சமில்லாமல் இயங்கும் அரசு இன்றைய அரசு. ஊழலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது அரசுகள் மாறிப்போய் தேசத்தின் மாட்சிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் காஸ்மீரம் அமைதிமார்க்கத்தின் பெயரின் பிடியிலிருந்து நல்வழி மார்க்கத்தில் இணையும் என்பதில் சந்தேகமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X