பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டம்; ஜம்மு காஷ்மீரில் அதிரடி சோதனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டம்; ஜம்மு காஷ்மீரில் அதிரடி சோதனை

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி-லஷ்கர் - இ -தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் நாட்டின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஜம்மு - காஷ்மீரின் பல இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய

புதுடில்லி-லஷ்கர் - இ -தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் நாட்டின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.



latest tamil news


இதையடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஜம்மு - காஷ்மீரின் பல இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் பொதுமக்கள்பலர், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதனால் பொதுமக்களிடையே பீதி நிலவி வருகிறது. இதையடுத்து, பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.


latest tamil news


இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் ஐ.ஜி., விஜய குமார் கூறுகையில், ''கடந்த இரண்டு வாரங்களில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு அதிகாரிகள் அக்., 13ல் நடத்திய சோதனையில், ஸ்ரீநகரில் ஐந்து பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர்,'' என்றார். இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீர் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X