பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தயாராகி விட்டீர்களா உ.பி., மக்களே?

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:நீண்ட நாட்களாக எந்த மருந்துக்கும் குணமாகாமல், உபாதையை கொடுத்துக் கொண்டிருக்கும் நோயில் இருந்து மீள, பாதிக்கப்பட்டவர்கள், எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற வேகத்தில், கண்ணில் காணும் மருந்துகளை எல்லாம் வாங்கி


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:latest tamil news


நீண்ட நாட்களாக எந்த மருந்துக்கும் குணமாகாமல், உபாதையை கொடுத்துக் கொண்டிருக்கும் நோயில் இருந்து மீள, பாதிக்கப்பட்டவர்கள், எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற வேகத்தில், கண்ணில் காணும் மருந்துகளை எல்லாம் வாங்கி தின்னத் துவங்குவர்.

அது போல, நீண்ட நெடிய ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கும் காங்., கட்சி, உ.பி.,யில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற அவதியில், வாய்க்கு வரும் வாக்குறுதிகளை எல்லாம், வாரி வழங்கத் துவங்கி விட்டது.'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவியருக்கு 'ஸ்மார்ட் போன்' மற்றும் பட்டதாரி பெண்களுக்கு 'ஸ்கூட்டி' வாகனம் இலவசமாக வழங்குவோம்' என திருவாய் மலர்ந்திருக்கிறார் பொதுச் செயலர் பிரியங்கா.வாக்குறுதி என்பது, எல்லா தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற, 'சிம்பிள்' விஷயம் பிரியங்காவுக்கு தெரியாமல் போனது வேடிக்கை.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவியரும், பட்டதாரி பெண்களும் இல்லாத குடும்பத்தினருக்கு, 'ஸ்மார்ட் போன்' வேண்டாமா, 'ஸ்கூட்டி' கொடுத்தால் வேண்டாம் என்று தவிர்த்து விடுவரா? இனி எதிர்க்கட்சியே உ.பி.,யில் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி கோலோச்ச, காங்., கட்சிக்கு சூப்பர் ஐடியா ஒன்றைச் சொல்வோம்.'மொத்தம் 20.42 கோடி மக்கள் கொண்ட உ.பி.,யில், ஒவ்வொரு குடும்பத்துக்கும், மாதம் தலா 10 ஆயிரம் ரூபாய் தருவோம்' என்று சொன்னால் போதும்; மேற்படி லட்சணத்தில் ஆட்சியைப் பிடித்து விடலாம்!

ஆட்சியில் இருக்கும் ஐந்து ஆண்டுகளும், மாதம் 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு, 60 X 10,000 = 6 லட்சம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைக்கும்!இந்த வாக்குறுதியை வழங்கிய பிறகு, மோடியின் செல்வாக்கு என்ன, யோகியின் நேர்மையான நிர்வாகம் என்ன... எதுவுமே எடுபடாது!'என்ன உளறுகிறீர்... அந்த அளவுக்கு அந்த மாநிலத்தின் கஜானா நிரம்பி வழிகிறதா என்ன...' என, சீறிப் பாயத் தோன்றுகிறதா?


latest tamil news


தமிழ் நாட்டில் நிறைவேற்றவே முடியாது என்று, நன்றாக, தெளிவாக, உறுதியாக தெரிந்திருந்தும், ஐநுாறுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கி, தி.மு.க., ஆட்சியை பிடிக்கவில்லையா!அதுபோல தான் இதுவும்!தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா, முடியாதா, கிடைக்குமா, கிடைக்காதா, கொடுப்பரா, மாட்டார்களா என்றெல்லாம் ஆராயக் கூடாது.நம்மைப் போல, 'கம்'முன்னு கேட்டு, 'ஜம்'முன்னு ஓட்டு போட்டுட்டு போயிட்டே இருக்கணும்!தயாராகி விட்டீர்களா உ.பி., மக்களே?


Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gs nathan - Chennai,இந்தியா
23-அக்-202121:55:45 IST Report Abuse
Gs nathan முதலில் தேசிய கட்சியான உங்கள் கட்சிக்கு ஒரு தலைவரை தேர்வு செயுங்கள்..,,, இன்னும் தலைவர் நாற்காலி அம்மா, மகன், மகள்,,, இப்படி உங்களை சுற்றியேதான் வருகிறது,,,, அதற்கே இன்னும் பஞ்சாயத்து முடியல அத்துக்குள்ள உ,பி க்கு வந்து வாக்குறுதி பொய்கள் அள்ளி வீசப்படுகிறது,,,
Rate this:
Cancel
23-அக்-202120:03:58 IST Report Abuse
ஆரூர் ரங் பிரியங்காவின் பாட்டி 1971இல் வறுமையை ஒழிப்போம் GAREEBI HATAO என்றெல்லாம் சொல்லி ஓட்டு கேட்டார். ஓடிப்போனது தனிமனித🙄 சுதந்திரம்தான். அவசரநிலை கொண்டுவந்து இருந்த சுதந்திரத்தையும் ஒழித்து விட்டார். ஓட்டு போட்டு ஏமாந்தவன் அப்பாவி. இப்போதும் அதேபோல் பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை முட்டாளாக்கப்பார்க்கிறார் பிரியங்கா.😝 எல்லாம் அதே ரத்தம்
Rate this:
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
23-அக்-202118:39:50 IST Report Abuse
Ambika. K யோகியின் நேர்மையான நிர்வாகம்?????? அய்யா சுப்பு, யாருய்யா நீயி? அய்யா மனிதா முன்பெல்லாம் ஒரு நாள் இரண்டு நாள் பந்த் என்றால் up பற்றி எரியும். ஸ்ப் பந்திர்க்கு அழைப்பு விடுத்தால் bsp அதை எதிர்க்கும். நாடு தழ்விய ஆர்பாட்டம் கலவரம். இப்பொழுது ஆர்பாட்டம் என்றால் சம்பந்த பட்ட கட்சி அந்த நஷ்டத்தை அரசிற்கு கட்ட.வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X