பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளருக்கு தலைமை செயலர் இறையன்பு பாராட்டு

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை : குப்பையில் கிடந்த தங்கத்தை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த துப்புரவு பணியாளரை, தலைமை செயலர் இறையன்பு பாராட்டி உள்ளார்.சென்னை திருவொற்றியூரை சேர்ந்த துப்புரவு பணியாளர் மேரி. இவர் குப்பையை தரம் பிரிக்கும்போது, அதில் இருந்து, 100 கிராம் எடையுள்ள தங்கத்தை கண்டுபிடித்துள்ளார். அதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய்.அதை போலீஸ் வாயிலாக உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.


சென்னை : குப்பையில் கிடந்த தங்கத்தை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த துப்புரவு பணியாளரை, தலைமை செயலர் இறையன்பு பாராட்டி உள்ளார்.சென்னை திருவொற்றியூரை சேர்ந்த துப்புரவு பணியாளர் மேரி. இவர் குப்பையை தரம் பிரிக்கும்போது, அதில் இருந்து, 100 கிராம் எடையுள்ள தங்கத்தை கண்டுபிடித்துள்ளார்.



latest tamil news




அதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய்.அதை போலீஸ் வாயிலாக உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். மேரியின் செயலை பாராட்டி, தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:அன்புள்ள மேரிக்கு வணக்கம். தேவை இருக்கும் இடத்தில் காணப்படும் துாய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தை கண்டுபிடித்து, உரியவரிடம் ஒப்படைத்த நேர்மை காரணமாக, உங்களிடம் இருக்கும் தங்க மயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது.


latest tamil news



நீங்கள் துாய்மை பணியாளர் மட்டுமல்ல; துாய்மையான பணியாளர். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். குறுக்கு வழிகள் எல்லாம், நேர்வழிகளை காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று; வாழ்த்துகள்.இவ்வாறு இறையன்பு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
23-அக்-202117:36:33 IST Report Abuse
Barakat Ali "சி எஸ் சார் சி எஸ் சார்" தொலைபேசியில் ஒரு குரல் "என்ன சார்?" என்கிறார் "தூய்மை பணியாளர்களை என் சார்பா நீங்களே பாராட்டிடுங்க நான் செஞ்சா ஜனங்க நம்பமாட்றாங்க நான் எது செஞ்சாலும் டிராமா நல்லா இருக்குன்னு கிண்டல் பண்ணுறாங்க" சி எஸ் "அட நீங்க சொல்லி நான் கேக்காம இருப்பனா?" என்று சொல்லி, போனை வைத்துவிட்டு தலையில் அடித்துக்கொள்கிறார்
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
23-அக்-202114:29:44 IST Report Abuse
Bala துப்புரவு பணியாளர் மேரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
23-அக்-202113:48:14 IST Report Abuse
Duruvesan அவர்களுக்கு பால்கணியில் மொட்டை மாடியில் நின்று கை தட்டி salute செய்த போது கேலி செய்த தீயமுக அல்லக்கைஸ் இப்போ கூவுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X