தூய்மை பணியாளருக்கு தலைமை செயலர் இறையன்பு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளருக்கு தலைமை செயலர் இறையன்பு பாராட்டு

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (10)
Share
சென்னை : குப்பையில் கிடந்த தங்கத்தை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த துப்புரவு பணியாளரை, தலைமை செயலர் இறையன்பு பாராட்டி உள்ளார்.சென்னை திருவொற்றியூரை சேர்ந்த துப்புரவு பணியாளர் மேரி. இவர் குப்பையை தரம் பிரிக்கும்போது, அதில் இருந்து, 100 கிராம் எடையுள்ள தங்கத்தை கண்டுபிடித்துள்ளார். அதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய்.அதை போலீஸ் வாயிலாக உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.


சென்னை : குப்பையில் கிடந்த தங்கத்தை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த துப்புரவு பணியாளரை, தலைமை செயலர் இறையன்பு பாராட்டி உள்ளார்.சென்னை திருவொற்றியூரை சேர்ந்த துப்புரவு பணியாளர் மேரி. இவர் குப்பையை தரம் பிரிக்கும்போது, அதில் இருந்து, 100 கிராம் எடையுள்ள தங்கத்தை கண்டுபிடித்துள்ளார்.



latest tamil news




அதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய்.அதை போலீஸ் வாயிலாக உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். மேரியின் செயலை பாராட்டி, தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:அன்புள்ள மேரிக்கு வணக்கம். தேவை இருக்கும் இடத்தில் காணப்படும் துாய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தை கண்டுபிடித்து, உரியவரிடம் ஒப்படைத்த நேர்மை காரணமாக, உங்களிடம் இருக்கும் தங்க மயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது.


latest tamil news



நீங்கள் துாய்மை பணியாளர் மட்டுமல்ல; துாய்மையான பணியாளர். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். குறுக்கு வழிகள் எல்லாம், நேர்வழிகளை காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று; வாழ்த்துகள்.இவ்வாறு இறையன்பு கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X