பா.ம.க., மாவட்ட செயலாளர் படுகொலை: காரைக்காலில் பதட்டம்; இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : அக் 25, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்காரைக்காலில் பா.ம.க., மாவட்ட செயலாளர் படுகொலை காரைக்கால்: கட்சி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய காரைக்கால் பா.ம.க., மாவட்ட செயலாளர் தேவமணி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தினால் காரைக்காலில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால், கலவரம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.காரைக்கால் திருநள்ளாறு


இந்திய நிகழ்வுகள்
காரைக்காலில் பா.ம.க., மாவட்ட செயலாளர் படுகொலை


காரைக்கால்: கட்சி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய காரைக்கால் பா.ம.க., மாவட்ட செயலாளர் தேவமணி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தினால் காரைக்காலில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால், கலவரம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்கால் திருநள்ளாறு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் தேவமணி, 45; காரைக்கால் பா.ம.க., மாவட்ட செயலாளர். இவர், நேற்றிரவு 10.30 மணியளவில் திருநள்ளாறு தேரடி வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார்.திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாய்த்து அருகே அவர் பைக்கை பின்தொடர்ந்து 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தேவமணியை திடீரென வழிமறித்தது.

தன்னை கொல்ல திட்டமிட்டு கும்பல் வழிமறிப்பதை அறிந்த தேவமணி தப்பிக்க பைக்கினை போட்டு விட்டு அலறியபடி தப்பி ஓட முயன்றார்.அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் கை, தலையில் வெட்டுகள் விழுந்தது. பலத்த காயமடைந்த தேவமணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.தேவமணியின் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டனர். இதனை கண்டதும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அவரை மீட்ட பொதுமக்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்றின்றி 11.10 மணியளவில் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எஸ்.பி., கள்., வீரவல்லபன், ரகுநாயகம், திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி, பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் சீனியர் போலீஸ் நிகாரிகா பட் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பா.ம.க., மாவட்ட செயலாளர் தேவமணி கொலை செய்யப்பட்டதும், பா.ம.க.,நிர்வாகிகள் தொண்டர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்த அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க அனைத்து நடவடிக்களும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து, அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட காரைக்கால் பா.ம.க., மாவட்ட செயலாளர் தேவமணி மீது கொலை முயற்சி உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காரைக்காலில் எந்த பிரச்னையாக இருந்தாலும் முதல் ஆளாக முன் நின்று தீர்க்க முயல்வார். பொது பிரச்னையிலும் முன் நின்று வழக்கு தொடர்ந்தார். கொரோனா நோய் பரவதால் புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்இதன் காரணமாக காரைக்கால் மட்டுமின்றி தமிழகத்திலும் நிறைய எதிரிகள் உருவாகினர்.

இந்நிலையில் எந்த பிரச்னையில் தேவமணி கொலை செய்யப்பட்டார் என தீவிர விசாரணையை திருநள்ளார் போலீசார் நடத்தி வருகின்றனர். தேவமணி கொலை சம்பவத்தை தொடர்ந்து பைக் எண்களை கொண்டு காரைக்கால் எல்லை பகுதிகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, விடிய விடிய தேடுதல் வேட்டை நடந்தது. கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலை நடந்த கொம்யூன் பஞ்சாய்த்து அலுவலகம் அருகே உள்ள சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை கைப்பற்றிய போலீசார் கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தேவமணிக்கு மலா 40 என்ற மனைவியும் ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த கொலை சம்பவத்தினால் காரைக்காலில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு கலவரம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானவர்


காரைக்கால் மாவட்ட பா.ம.க., தேவமணி இலங்கை அகதிகளை படகில் அனுப்ப முயன்ற வழக்கில் கடந்த 2010 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டார்.


இட பிரச்னை காரணமா?


அண்மையில் தேவமணி வீட்டிற்கு எதிரில் உள்ள இடம் சம்பந்தமாக அவருக்கும், மற்றொரு தரப்பினருக்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்த இடம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த இட பிரச்னை சம்பந்தமாக அவர் கூலி படை ஏவி கொலை செய்யப்பட்டரா என, திருநள்ளாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ உயிர் தப்பிக்க குதித்த காவலாளி பலி
latest tamil newsமும்பை-மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. உயிர் தப்பிப்பதற்காக 19வது மாடியிலிருந்து குதித்த காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையின் லால்பாக் என்ற இடத்தில் 61 மாடிகள் உடைய 'அவிக்னா பார்க்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 19வது மாடியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பின் காவலாளிகளில் ஒருவரான அருண் திவாரி, 30, விபத்து ஏற்பட்ட 19வது மாடிக்கு விரைந்து சென்றார். ஆனால் அங்கு தீயில் சிக்கிக் கொண்டார். அங்கிருந்து தப்பிக்க பால்கனிக்கு வந்தார். அங்கும் தீ பரவியதால் பால்கனி கைப்பிடியை பிடித்து தொங்கி அடுத்த தளத்தில் குதித்து தப்பிக்க நினைத்தார். எதிர்பாராதவிதமாக கைநழுவி தரையில் விழுந்தார். பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், காவலாளி அருண் திவாரி உயிரிழந்தார்.அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ நான்கு மணி நேர போராட்டத்துக்கு பின் முற்றிலும் அணைக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.


சிறுமி கொலை: சிறுவர்கள் கைதுநாகோன்: அசாமின் நாகோன் மாவட்டத்தில் சமீபத்தில், 11 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள், தங்கள் தோழியான 6 வயது சிறுமியிடம் மொபைல் போனில் ஆபாச 'வீடியோ'வை பார்க்க வற்புறுத்தி உள்ளனர். அதை பார்க்க சிறுமி மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள், சிறுமியை அடித்துக் கொலை செய்துள்ளனர். இதில் தொடர்புடைய அந்த சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.


ஹெராயின் பறிமுதல்: ராணுவ வீரர்கள் கைது


அசாமில் தின்சுக்கியா மாவட்டத்திற்கு நாகாலாந்தில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்தன. ஜோகாய் வனப்பகுதிக்கு அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
அதில் இருந்த நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜோர்ஹட் மாவட்டத்தில் போதைப் பொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து திப்ருகர் மாவட்ட காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் பிதுல் சேத்தியா தலைமையிலான குழுவினர் அந்த வாகனத்தை கண்டறிந்தனர். அதில் இருந்து 269 கிராம் எடையிலான, ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 1 கோடி ரூபாய்.மேலும், அசாம் ரைபிள்ஸ் படையினரின் சீருடைகளும், 48 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்பு உடைய அசாம் ரைபிள்ஸ் படையின் மூன்று வீரர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.


எம்.பி., மீது தாக்குதல் திரிபுராவில் பரபரப்பு

திரிணமுல் காங்., கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாக இருப்பவர் சுஷ்மிதா தேவ். திரிணமுல் காங்., கட்சியின் திரிபுரா மாநில மேற்பார்வையாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
திரிணமுல் கட்சிக்கு தேர்தல் ஆலோசகராக செயல்படும் 'ஐ-பேக்' நிறுவன ஊழியர்களுடன் சுஷ்மிதா தேவ், நேற்று திரிபுரா சென்றார்.அம்தாலி பஜார் என்ற இடத்தில் சிலர், சுஷ்மிதா தேவ் சென்ற காரை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் ஐபேக் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர் காயம் அடைந்தனர்.


மது அருந்திய வாலிபர் கைது

காரைக்காலில் பொது இடத்தில் மது அருந்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் நெடுங்காடு பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெடுங்காடு போலீ சார் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனர்.அப்போது பொது இடத்தில் பொது மக்க ளுக்கு இடையூறாக சாலையோரத்தில் மது அருந்திய மயிலாடுதுறை, புளி தெருவை சேர்ந்த பாபு, 24, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


விபசாரம் நடந்த 2 மசாஜ் சென்டருக்கு சீல்


புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து, ஆன்லைன் விபசாரம், கஞ்சா விற்பனை நடக்கிறது. குறிப்பாக ஸ்பா, மசாஜ் சென்டர் பெயரில் விபசார தொழில் ஜரூராக நடந்து வருகிறது.இது குறித்து ஏராளமான புகார் சென்றது. சீனியர் எஸ்.பி., லோகேஸ்வரன் உத்தரவின்பேரில், சிறப்பு அதிரடிப்படை போலீசார் கடந்த 16ம் தேதி, அண்ணா நகர், மறைமலையடிகள் சாலை, காமராஜர் நகர் பகுதியில் இயங்கிய ஸ்பா, மசாஜ் சென்டர்களில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கு இருந்த 10 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். விபசார தொழில் நடத்திய 2 பெண்கள், வாடிக்கையாளர்கள் 4 பேர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.துச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில், புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள், மறைமலையடிகள் சாலை, அண்ணா நகரில் இயங்கிய 2 மசாஜ் சென்டர்களை நேற்று மதியம் பூட்டி சீல் வைத்தனர்.


நாய்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

-புதுச்சேரியில் விஷம் வைத்து நாய்கள் கொல்லப்பட்ட வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி, சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்பில் நேற்று முன்தினம் மதியம் 7 நாய்கள் வரிசையாக சுருண்டு விழுந்து இறந்தது. விலங்கு நல அமைப்பினர் மற்றும் அப்பகுதி மக்கள் நடத்திய விசாரணையில், இறைச்சியில் விஷம் கலந்து கொடுத்து நாய்கள் கொல்லப்பட்டது தெரியவந்தது.இறந்த நாய்கள், பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது. கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சாரம் மொட்ட தோப்பு பகுதியைச் சேர்ந்த சுந்தர், 32; என்ற வாலிபர், நாய்களுக்கு விஷம் கலந்து கொண்டு கொன்றது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் சுந்தரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை

-வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிக்கன் கடை தொழிலாளி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அரியாங்குப்பம், காக்கையான்தோப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 49; அரியாங்குப்பத்தில் உள்ள சிக்கன் கடையில் வேலை செய்து வந்தார். தொடர்ந்து மது குடித்து வந்ததால் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


கடனை கேட்ட முதியவர் அடித்து கொலை


ஹாசன் : கொடுத்த கடனை திருப்பி கேட்ட முதியவரை, அடித்து கொலை செய்து தலைமறைவாக இருந்த வாலிபரை, ஹாசன் ஊரக போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, ஹாசன் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சீனிவாஸ் கவுடா நேற்று கூறியதாவது: ஹாசன் சமுத்ரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தாசேகவுடா, 60. இவரிடம் கிரண், 26, என்பவர், சில ஆண்டுக்கு முன், ஐந்து லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். இந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தார். கிரிக்கெட் சூதாட்டம் உட்பட பல விதமான கெட்ட பழக்கங்களுக்கு அடிமையான கிரணால், பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை.பணத்தை கேட்டு தொந்தரவு கொடுத்த தாசேகவுடாவை, கொலை செய்ய திட்டமிட்டார். அக்டோபர் 12ல், தன் நிலத்தில் இருந்த போது, அவரை கத்தியால் குத்தி கொலை செய்த கிரண் தப்பியோடினார். விசாரணை நடத்திய ஹாசன் ஊரக போலீசார், அவரை கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


தமிழக நிகழ்வுகள்
கஞ்சா சப்ளை செய்த கும்பல் கைது


latest tamil news


ஊட்டி: நீலகிரி எல்லை மற்றும் வயநாடு பகுதி சொகுசு விடுதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பலை கேரளா போலீசார் கைது செய்தனர்.


தமிழக போலீசிடம் கேரள வனத்துறை விசாரணை

ஊட்டி-: கேரளா மாநிலம் முத்தங்கா வனப்பகுதியில் தமிழக போலீஸ் சிஜு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற நிலையில் கண்காணிப்பு கேமராவில் சிக்கினார். தற்போது தலைமறைவாக உள்ள சிஜுவை சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், கேரளா வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதுடன், தமிழக போலீசாரிடம் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.


துடியலூரில் ரூ.1.50 கோடி மதிப்பு நகைகள் கொள்ளைlatest tamil news


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட அதிர்ஷ்டலட்சுமி நகர் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன்(54). இவர் தனியார் ஐஸ்கிரீம் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு, வீட்டில் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் கீழே வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த 4 வைர நெக்லஸ்(மதிப்பு ரூ.1.30 கோடி) மற்றும் 50 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர். அதே பகுதியில் 4 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்தது. இருந்தாலும் அங்கு ஏதும் கொள்ளை போகவில்லை. தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி., செல்வரத்தினம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.


விஜயபாஸ்கர் கூட்டாளிகள் வீடு, அலுவலகங்களில் 'ரெய்டு'சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மற்றும் கூட்டாளிகளின் வீடு, அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார்வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன், விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், தொழில் பங்குதாரர்கள், உதவியாளர் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தி, 5 கிலோ தங்கம், 23 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.சென்னை நந்தனம், சேமியர்ஸ் சாலையில், அடுக்குமாடி குடியிருப்பில், விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் வீடு உள்ளது.

அதேபோல, அவரது கூட்டாளி கோவையைச் சேர்ந்த சந்திரசேகர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தனியார் நிறுவனம் நடத்துகிறார்.சென்னை அண்ணா நகர், சாந்தி காலனியில், விஜயபாஸ்கரின் முன்னாள் உதவியாளர் முருகன் வசிக்கிறார். இவர்களது வீடு, அலுவலகங்கள் பூட்டிக் கிடந்ததால், போலீசார் சோதனை நடத்தவில்லை. அந்த இடங்களில் நேற்று சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

அதேபோல, சேலம், வேலு நகரைச் சேர்ந்தவர் டாக்டர் செல்வராஜ், 52. அவர், விஜயபாஸ்கரின் கல்லுாரி நண்பர்; சீலநாயக்கன்பட்டியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.இந்த மருத்துவமனை மற்றும் செல்வராஜ் வீட்டிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.


ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ 44 ஆயிரம் அபேஸ்கோவை:கோவை அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி விஜய நிர்மலா, 43. இவர் துடியலூரில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்மநபர் விஜயநிர்மலாவின் கைப்பையை திருடிச் சென்றனர். திருடிய மர்ம நபர் சிறிது நேரத்தில் விஜயநிர்மலாவின் கைப்பையில் இருந்த ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, வங்கிக்கணக்கில் இருந்து ரூ.44 ஆயிரம் பணத்தை திருடினார். விஜயநிர்மலா வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


latest tamil newsஈ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் எட்டு 'பார்'களுக்கு 'சீல்'சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ்காந்தி சாலையில், டாஸ்மாக் அருகில் அனுமதியின்றி மதுக்கூடங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு, சுகாதாரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், டாஸ்மாக் மது பாட்டில்கள் இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என, பல்வேறு புகார்கள் எழுந்தன.இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரி தலைமையில், அடையாறு கலால் பிரிவு போலீசார் கொண்ட குழு, நேற்று அதிரடி ஆய்வு நடத்தியது.

இதில், ராஜிவ்காந்தி சாலையில் சோழிங்கநல்லுார், காரப்பாக்கம், துரைப்பாக்கம், பெருங்குடி, கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் ஆகிய பகுதிகளில், எட்டு மதுக்கூடங்கள் அனுமதியின்றி இயங்கியது தெரிந்தது. இவற்றுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.மேலும், மதுக்கூட ஊழியர்கள் மீது கலால் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


நான்கு பேர் கொலை: குற்றவாளி மர்ம மரணம்மூணாறு : கம்பகக்கானத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அடிமாலி கொரங்காட்டி மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த அனீஷ் 34, வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே வண்ணபுரம்கம்பகக்கானத்தில் மாந்திரீகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்து வந்தவர்கிருஷ்ணன், 52. அவரிடம் அனீஷ் உதவியராக இருந்தார். தங்க நகைகளுக்காக கிருஷ்ணன், அவரது மனைவி சுசிலா, 50,மகள் அர்ஷா, 21, மகன் அர்ஜூன், 19, ஆகியோரை அனீஷ் உள்பட நான்கு பேர் கொண்ட கும்பல் 2018 ஜூலை 29ல் கொலை செய்து வீட்டின் அருகில் உள்ள சாணக்குழியில் புதைத்தனர்.

தொடுபுழா போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.அனைவரும் ஜாமினில் வெளியில் வந்தனர். இந்நிலையில் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அனீஷ் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.அடிமாலி போலீசார் விசாரிக்கின்றனர்.


வெறிநாய் கடித்து சிறுவன் பலிதேவதானப்பட்டி : தேவதானப்பட்டியில் வெறிநாய்கடித்து ஆரம்பசுகாதாரநிலையத்தில் தடுப்பூசி செலுத்தி சிகிச்சைப்பெற்ற சிறுவன் பாலகேஸ்வரன் பலியானார்.

தேவதானப்பட்டி மேட்டுவளவு சேர்ந்த முத்துப்பாண்டி மகன் பாலகேஸ்வரன் 6. அக்.6ல் விளையாடிக்கொண்டிருந்த போது வெறிநாய் கழுத்தில் கடித்தது. பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பாலகேஸ்வரனுக்கு, முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அடுத்த இரு டோஸ்களும் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் பாலகேஸ்வரன் நேற்று முன்தினம் இறந்தார்.நாய்தொல்லை அதிகரிப்பு: தேவதானப்பட்டி பேரூராட்சியில் நாய்கள் அதிகளவில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கருத்தடை ஆப்பரேஷன் செய்ய வேண்டும். 5 ஆண்டுகளாக பேரூராட்சியில் நடவடிக்கை இல்லை. அனைத்து வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. வட்டார மருத்துவ அலுவலர் கோமதி கூறுகையில்: நாய் கடியால் பாலகேஸ்வரன் இறந்த தகவல் எனக்கு வரவில்லை. விபரங்களை கேட்டு தெரிவிக்கிறேன் என்றார்.


ரூ 2.5 லட்சம் நகை திருட்டு; ஆசிரியர் வீட்டில் துணிகரம்விருத்தாசலம்-விருத்தாசலத்தில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருத்தாசலம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 37; வேப்பூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி கவிதா, 35; இவர் கோவிலுார் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டி வேலைக்கு சென்றனர்.பணி முடிந்து தம்பதி மாலை 6.30 மணிக்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந் திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு 4 சவரன் நகைகள், ரூ. 8,000, ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் ஆகும். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


உலக நிகழ்வுகள்
ரஷ்யாவில் விபத்து 16 பேர் பலிமாஸ்கோ-ரஷ்யாவில் துப்பாக்கிக் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.ரஷ்ய நாட்டின் ரியாஷன் மாகாணத்தில் உள்ள துப்பாக்கிக் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று திடீரென குண்டுகள் வெடித்து தீப்பற்றியது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்து விட்டதாக ரஷ்ய நாட்டு அவசரகால அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. பலத்த காயம் அடைந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் 170 பேர் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


வங்கதேசத்தில் வன்முறைக்கு காரணமானவர் கைது


டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான வன்முறைக்கு காரணமானவரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் சமீபத்தில் மதவெறிக் கும்பல்கள் ஹிந்துக்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தின. ஹிந்துக்களுக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 66 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. நாட்டின் பல பகுதிகளில் ஹிந்து கோவில்கள் சூறையாடப்பட்டன. சாமி சிலைகளை உடைத்து, துர்கா பூஜை விழாவை வன்முறைக் கும்பல் சீர்குலைத்தது. இந்த வன்முறையில் ஏழு பேர் உயிரிழந்தனர்.சமூக ஊடகத்தில் மத உணர்வை துாண்டும் செய்தி பரவியது தான் இந்த வன்முறைக்கு காரணம் என, கூறப்படுகிறது.இந்நிலையில் ஹிந்துக்கள் மீதான வன்முறைக்கு காரணமான இக்பால் உசேன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
23-அக்-202115:42:02 IST Report Abuse
Vena Suna 11 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள், தங்கள் தோழியான 6 வயது சிறுமியிடம் மொபைல் போனில் ஆபாச 'வீடியோ'வை பார்க்க வற்புறுத்தி உள்ளனரா?என்ன கொடுமை இது? .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X