பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழை அக்.,26ல் துவங்குவது உறுதி

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021
Share
Advertisement
சென்னை : வடகிழக்கு பருவ மழை, வரும் 26ம் தேதி துவங்குவது உறுதியாகியுள்ளது. அதற்கான சூழல் ஏற்பட்டு விட்டதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி:குமரி கடலை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், நாமக்கல் மற்றும்

சென்னை : வடகிழக்கு பருவ மழை, வரும் 26ம் தேதி துவங்குவது உறுதியாகியுள்ளது. அதற்கான சூழல் ஏற்பட்டு விட்டதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி:குமரி கடலை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும்.

அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ஆகியவற்றில் நாளை கனமழை பெய்யும். வரும் 25, 26ம் தேதிகளில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், கன முதல் மிக கனமழை வரை பெய்யும்.


latest tamil news


தமிழகத்தில், வரும் 25ம் தேதி தென் மேற்கு பருவ மழை முழுதும் விலகி, 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கி விடும். அதற்கான சாதக சூழல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை இயல்பான நிலையில் எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக அமராவதி அணையில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. செஞ்சி, அரவக்குறிச்சி, திருமூர்த்தி அணை, 7; காமாட்சிபுரம், மடத்துக்குளம், 6; வீரபாண்டி, அரியலுார், வேடசந்துார், 5 செ.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X