பொது செய்தி

தமிழ்நாடு

ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம்; அமைச்சர் மதிவேந்தன் ஆலோசனை

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை : ராமேஸ்வரம் மற்றும் கொடைக்கானலில், ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை துவங்குவது குறித்து, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆலோசனை நடத்தினார்.சுற்றுலா துறை திட்டங்களை செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம், சென்னை வாலாஜா சாலையில் உள்ள, துறை தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.ரூ. 50 லட்சம்இதில், அமைச்சர் மதிவேந்தன் மற்றும் உயர் அதிகாரிகள்


சென்னை : ராமேஸ்வரம் மற்றும் கொடைக்கானலில், ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை துவங்குவது குறித்து, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆலோசனை நடத்தினார்.சுற்றுலா துறை திட்டங்களை செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம், சென்னை வாலாஜா சாலையில் உள்ள, துறை தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.latest tamil newsரூ. 50 லட்சம்இதில், அமைச்சர் மதிவேந்தன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை, சுற்றுலா பயணியர் இரவிலும் கண்டுகளிக்கும் வகையில், 'லேசர்' தொழிற்நுட்ப வசதியுடன், ஒளியூட்டம் செய்வது தொடர்பாக திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பூம்புகார் நகரத்தை, சுற்றுலா பயணியர் கவரும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பிச்சாவரம் அலையாத்தி காடுகளை ஒட்டி பூங்கா, திறந்தவெளி முகாம், காட்சி கோபுரம், படகு குழாம் அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா துவங்குவதற்கு, 'ஹெலிபேட்' அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஒகனேக்கல் நீர்வீழ்ச்சிக்கு வரும் பயணியர் வசதிக்காக, பார்வையாளர் மாடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தும் வகையில், சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்படுகிறது.


latest tamil newsகிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, முதலியார்குப்பம் படகு குழாம் அருகில், ஒடியூர் ஏரியில் அமைந்துள்ள தீவுப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணியர் வசதிக்காக நீர்விளையாட்டுகள், தேநீர் விடுதி போன்ற வசதிகள், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட உள்ளன. புகைப்பட போட்டிஇத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

உலக சுற்றுலா தினத்தை ஒட்டி செப்., 27ல் சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர், சமூக வலைதளம் வாயிலாக, சுற்றுலா பயணியரால் அதிகம் அறியப்படாத இடங்கள் குறித்த புகைப்பட போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
23-அக்-202119:34:17 IST Report Abuse
Vena Suna மதிய அரசு இரு திட்டம் போட்டால் அதை காப்பி அடிப்பது.புதுவை அரசு திட்டம் போட்டால் காப்பி அடிப்பது.சுயமா சிந்திக்க மாடீங்களாடா
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். ஆக ஆக ஆஹா!! உண்மையிலே மரத்த தமிழ் நாட்டில் கண்ணுக்கு தெரியாமல் பாலாறும் தேனாறும் திரண்டு ஓட ஆரம்பித்தது விட்டதா??? முன்னாடி எலி காப்டர் ஓட அதைத் துரத்திக்கொண்டு பின்னாடி பூனைக் காப்டர் ஓட அட அட அடடா!! மட சங்கிகள் வயிறெரிந்து சாவார்களே!!! எலிகாப்டரில் பெண்களுக்கும் தாழ்த்தப் பட்டோருக்கும் இலவசம் என்று அறிவிக்க வேண்டும்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
23-அக்-202114:43:12 IST Report Abuse
sankaseshan கூவத்தை சுத்தம் செய்து முதலய விட்டு சென்னையை சிங் காரமாக்கி அழகு பாத்தாச்சு . ஹெலிகாப்டர் விட்டு பணம் பண்ணனும் , நெஸ்ட்டு ப்ராஜெக்ட் ஜமாய் ராஜா ஜமாய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X