அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பதவியிலிருந்து உங்களை முதல்வர் ஸ்டாலின் நீக்கட்டும். அப்போது இப்படி, கீதை, குர் ஆன் என கூறுவீர்களா என பார்ப்போம்!

Added : அக் 23, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
எனக்கு கீதை, குர் ஆன், பைபிள் எல்லாம் முதல்வர் ஸ்டாலின் தான். அவருடனான, 40 ஆண்டு பயணத்தில் அவர் சொல்லியும் நான் கேட்காதது ஒரே முறை தான். சட்டசபையில், 'என்னை புகழாதீர்' என்றார். அதை மட்டும் தான் நான் கேட்கவில்லை. - தமிழக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி: அமைச்சர் பதவியிலிருந்து உங்களை முதல்வர் ஸ்டாலின் நீக்கட்டும். அப்போது இப்படி, கீதை, குர் ஆன் என

எனக்கு கீதை, குர் ஆன், பைபிள் எல்லாம் முதல்வர் ஸ்டாலின் தான். அவருடனான, 40 ஆண்டு பயணத்தில் அவர் சொல்லியும் நான் கேட்காதது ஒரே முறை தான். சட்டசபையில், 'என்னை புகழாதீர்' என்றார். அதை மட்டும் தான் நான் கேட்கவில்லை. - தமிழக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி:latest tamil news
அமைச்சர் பதவியிலிருந்து உங்களை முதல்வர் ஸ்டாலின் நீக்கட்டும். அப்போது இப்படி, கீதை, குர் ஆன் என கூறுவீர்களா என பார்ப்போம்!


மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, கல்வி தொடர்பான, ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை தான் அமல்படுத்துகிறது; வரலாற்றை திருத்தி எழுதுகிறது. அதன் உண்மையான தலைவர் ஆர்.எஸ்.எஸ்., தான்! - மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை


இப்போது தான் கண்டுபிடித்தீர்களா... பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பலர், ஆர்.எஸ்.எஸ்., முன்னாள் பிரசாரகர்கள் தானே. அதனால் தானே அவர்களால், உங்களைப் போன்றவர்களை காலாகாலத்திற்கும் சமாளிக்க முடிகிறது!


நலிவடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லாபத்தை தரமுடியாத அந்த நிறுவனங்களால், புதிய வேலை வாய்ப்புகளையும் வழங்க முடியவில்லை. அதனால் தான், அவற்றை தனியார்மயமாக்கலாம் என்கிறார் பிரதமர் மோடி.-
தமிழக பா.ஜ., மாநில பொதுச் செயலர் கரு.நாகராஜன் பேட்டி


நல்ல விஷயம் தானே! லாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்கள் மீது கை வைக்க வேண்டாம் என்று தலைமை சிந்தித்துள்ளதா என்பதை மட்டும் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்!கருணாநிதியிடம் யார் என்ன சொன்னாலும், அதை கேட்டுக் கொள்வார். சுயமாக அவரே முடிவெடுப்பார். ஆனால், இப்போதைய முதல்வர் ஸ்டாலின் அப்படியில்லை. இதனால் தான், கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்றேன். -தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி

நீங்கள் சொல்வது படி பார்த்தால், ஸ்டாலின் சுயமாக முடிவெடுப்பதில்லை. கட்சியினரால், 'ஆபத்தானவர்கள்' என கூறப்படும் துரைமுருகன், பொன்முடி போன்றோர் சொல்லி தான், முடிவெடுக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது!

கிறிஸ்துவ அறநிலையத்துறை, முஸ்லிம் அறநிலையத்துறைகளை உருவாக்கி, இரண்டு அமைச்சர்களை இந்த மதச்சார்பற்ற, தி.மு.க., அரசு நியமிக்க, திராவிடர் கழக வீரமணி, விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், நாம் தமிழர் சீமான் போன்றோர் வலியுறுத்த வேண்டும். - ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் அறிக்கை


தி.மு.க., மட்டுமல்ல. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த எந்த அரசுகளும் இதை செய்யவில்லை. பா.ஜ., ஆளும் மாநிலங்களிலும் இல்லையே ஏன்?


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., நிலைப்பாடு குறித்து அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும். தி.மு.க., அரசு, தற்போது வரை நடுநிலையாக செயல்படுகிறது. -
தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேட்டிரெய்டு செய்யும் அளவுக்கு உங்கள் கட்சி இன்னும் வளரவில்லை. தலைவர் வேறு உடல்நலமில்லாமல் இருக்கிறார். அதனால் உங்கள் கட்சியை விட்டு வைத்துள்ளனர். மேலும், தி.மு.க.,வை பொறுத்தவரை, அ.தி.மு.க., கூட இல்லை; பா.ஜ., தான் அதற்கு போட்டி!
latest tamil newsஇலங்கை பிரதமர் ராஜபக்சேவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்ன சொல்கிறாரோ அதைத் தான் செய்கிறார். யாராவது சிறிய உதவி செய்தால் கூட அதை பெரிதாக நினைக்கிறார். அவரைப் போன்ற பல அரசியல்வாதிகள் நமக்கு தேவை. - பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை


அவரிடம் பரிசு வாங்கிவந்தவர்கள் கூட, இந்த அளவுக்கு அவரை உயர்வாக பேசவில்லையே!


'நடிகர் விவேக் தடுப்பூசி போட்டதற்கு பின் தான் அவர் சுயநினைவை இழந்தார்' என்று மக்களை அச்சுறுத்தினார், வி.சி., தலைவர் திருமாவளவன். ஆனால், இன்று நுாறு கோடி தடுப்பூசியை செலுத்தியுள்ளது இந்தியா.- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.
இதன் மூலம், மூளை சலவை கட்சிகளை மக்கள் நம்பவில்லை என்பது தெளிவாகிறது!


கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக்கழிவு புதை மையத்தை அணுஉலைக்கு வெளியே அமைக்க வேண்டும். அதுவரை அணு உலைகளை நிறுத்தி வைக்க வேண்டும்.-
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி:


நமக்கு எதற்கு அணு விஞ்ஞானம்... அதற்கெல்லாம் விஞ்ஞானிகள் இருக்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொள்வர். ஹிந்துக்களுக்கு எதிராக அடுத்த போராட்டத்திற்கு கட்சியினரை தயார்படுத்துங்கள். அது தானே நம் வேலை!

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
24-அக்-202102:28:27 IST Report Abuse
LAX பிரேம் சொன்னதாக நீங்க வெளியிட்ருக்கற செய்தில, 'ரெய்டு' ன்ற விஷயமே இல்ல.. ஆனா உங்க டவுட்டுல 'ரெய்டு' பத்தி கமெண்ட் போட்ருக்கீங்க..?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
23-அக்-202119:52:38 IST Report Abuse
S. Narayanan கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தை திருமாவே கவனிக்கலாம் அல்லவா.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
23-அக்-202119:41:14 IST Report Abuse
s t rajan குடும்ப அரசியல், குடும்பக் கொள்ளை போன்ற கொள்கைகளை தான் குரான், பைபிள் என்கிறாரோ, மாண்பு மிகு அமைச்சர் நாசர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X