பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி அவசியம்: 197 நாட்டின் கொடியோடு நடைபயணம்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மானாமதுரை: கொரோனா தடுப்பூசி அவசியத்தை வலியுறுத்தி 197 நாடுகளின் கொடிகளோடு மானாமதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் 2,800 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்கிறார்.நடைபயணம் செல்லும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூர நடை
கோவிட், விழிப்புணர்வு, 2800 கிலோமீட்டர், ராணுவீரர், நடைபயணம், உற்சாக வரவேற்பு

மானாமதுரை: கொரோனா தடுப்பூசி அவசியத்தை வலியுறுத்தி 197 நாடுகளின் கொடிகளோடு மானாமதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் 2,800 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்கிறார்.


latest tamil news


நடைபயணம் செல்லும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூர நடை பயணம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் பல்வேறு நாடுகளின் உலகசாதனை புத்தகங்களிலும் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.


latest tamil news


இந்நிலையில், தற்போது தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை 2,800 கிலோமீட்டர் நடைபயணமாக 197 நாடுகளின் தேசிய கொடிகளோடு புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மானாமதுரை பகுதிக்கு நடைபயணமாக வந்த ராணுவ வீரர் பாலமுருகனை சிவகங்கை மாவட்டம் வைகை பட்டாளம் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-அக்-202114:17:04 IST Report Abuse
Ramesh Sargam ராணுவ வீரர் பாலமுருகன் அவர்களின் பயணம் சிறப்பாக அமைய பிரார்த்தனைகள்.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-அக்-202110:54:07 IST Report Abuse
முக்கண் மைந்தன் கூடவே பேச்சுத்தொணெக்கி ஏராப்லானுல சுத்ற ஆளவுங்கூட்டிட்டு போ
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-அக்-202110:50:09 IST Report Abuse
முக்கண் மைந்தன் வார 'ரேடியோப்பேச்சு கேக்கவா'வுக்கு content (கன்டென்ட்) ரெடி பண்ணிட்ருக்கானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X