அரசு விடுதி சமையலருக்கு அமைச்சர் வீட்டில் வேலை: பா.ஜ., அண்ணாமலை புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு விடுதி சமையலருக்கு அமைச்சர் வீட்டில் வேலை: பா.ஜ., அண்ணாமலை புகார்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (80)
Share
திருப்பூர்: அமைச்சர் கயல்விழியின் வீட்டில் தங்கி, சமையல் பணியை பார்க்க, அரசு மாணவர் விடுதி சமையலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, துறை சார்பில் இயங்கும் அரசு விடுதி சமையலர்களை, தன் வீட்டில் தங்கி, காலை 7:00 முதல் இரவு 10:00
bjp, annamalai, dmk, minister, kayalvizhi, பாஜ, திமுக, அமைச்சர், அண்ணாமலை, கயல்விழி

திருப்பூர்: அமைச்சர் கயல்விழியின் வீட்டில் தங்கி, சமையல் பணியை பார்க்க, அரசு மாணவர் விடுதி சமையலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, துறை சார்பில் இயங்கும் அரசு விடுதி சமையலர்களை, தன் வீட்டில் தங்கி, காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை சமையல் பணி செய்ய உத்தரவிட்டுள்ளார்


latest tamil news



'இது தான் தி.மு.க.,வின் சமூக நீதியா? வெட்கக்கேடு' என்று குறிப்பிட்டு உள்ளார். அத்துடன், ஏழு பணியாளர்கள், தலா இருவர் வீதம் 6 முதல் 31ம் தேதி வரை, வீட்டு சமையல் பணியை செய்யும் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.






latest tamil news


அமைச்சர் கயல்விழியிடம் கேட்டபோது, ''எங்கள் வீட்டில், தலா 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், இரண்டு சமையலர்கள் ஏற்கனவே பணியில் இருக்கின்றனர். ''ஓய்வு நேரத்தில், நானும் சமையல் செய்வேன். ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி பணியாளரை, எங்கள் வீட்டில் சமையல் செய்ய அழைக்க வேண்டிய அவசியம் இல்லை; இது, பொய்யான குற்றச்சாட்டு,'' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X