அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் கட்டுமான பொருட்கள் விலை குறைவு: பழனிசாமி

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை:தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் கட்டுமான பொருட்கள் விலை குறைவு என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று (அக்.,23ம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தி.மு.க. தேர்தல் வாக்குறுதி எண்: 468ல் முக்கியமான கட்டுமானப் பொருட்களான சிமென்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின்
கட்டுமான பொருட்கள், விலையேற்றம், அத்தியாவசி பட்டியல், எதிர்க்கட்சிதலைவர், பழனிசாமிகோரிக்கை, இபிஎஸ்,

சென்னை:தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் கட்டுமான பொருட்கள் விலை குறைவு என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (அக்.,23ம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தி.மு.க. தேர்தல் வாக்குறுதி எண்: 468ல் முக்கியமான கட்டுமானப் பொருட்களான சிமென்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைத்திடச் செய்வோம் என்று கூறியுள்ளனர்.


கட்டுமான பொருட்களின் விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, அதை நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சி தலைவர் பழனிசாமி சுட்டிக்காட்டி உள்ளார். அவரது அறிக்கையில், கட்டுமான பொருட்கள் தாறுமாறாக உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார் 370 ரூபாய் சிமெண்ட் 470 ரூபாய் ஆகியுள்ளது. ஒரு யூனிட் எம்.சாண்ட் 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. ஜல்லி ஒரு யூனிட் 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரத்து 800 ரூபாய்க்கு மேல் போய்விட்டது. 1 டன் கம்பி 48 ஆயிரத்தில் இருந்து 78 ஆயிரமாகிவிட்டது. ஒருலோடு செங்கல் 18 ஆயிரத்தி்ல இருந்து 29 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துவிட்டது. ஒரு லோடு கிராவல் 600ல் இருந்து 2 ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது. மரங்களின் விலையும் உச்சபட்சமாக உயர்ந்துள்ளது. வீடு கட்டுமான செலவு, சதுரடிக்கு 2,200 ரூபாய் என்பது, 3,100க்கு மேல் சென்றுவிட்டது. கட்டட உரிமையாளர்களும், ஒப்பந்ததாரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் கட்டுமான பொருட்களின் விலை 30 சதவீதம் வரை குறைவாகவே உள்ளன. கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் இணைத்து நியாயமான விலையில் கிடைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

latest tamil news



அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை கட்டுக்குள் இருந்தது. தி.மு.க., ஆட்சி பொறுப்பெற்ற பின் ஜூன் 2021 முதல் கட்டுமானப் பொருட்கள் விலை எந்தளவு உயர்ந்து கட்டுமானத்தொழிலே பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை சட்டசபையில் கவர்னர் உரையின் போதே குறிப்பிட்டேன்.

தற்போது சிமென்ட் ஒரு மூட்டை 370ல் இருந்து 470 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு யூனிட் எம்.சாண்ட் 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும், ஒரு யூனிட் ஜல்லி 2,000 ரூபாயிலிருந்து 3,800 ரூபாயாகவும், ஒரு டன் கம்பி 48,000 ரூபாயிலிருந்து 78,000 ரூபாயாகவும், ஒரு லோடு செங்கல் 18,000 ரூபாயிலிருந்து 29,000 ரூபாயாகவும், ஒரு லோடு கிராவல் மண் 600 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும், மரங்கள் உச்சபட்சமாக விலை உயர்ந்துள்ளது.

ஒரு சதுர அடி வீடு கட்டுவதற்கு தனியார் பொறியாளர்கள் 2,200 ரூபாயிலிருந்து 3,100 ரூபாயாக அதிகரித்துள்ளது. மற்ற கட்டுமானப் பொருட்களின் விலைகளும் தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் 30 சதவீதம் வரை குறைவாகவே உள்ளன.


latest tamil news


மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவில் சிசென்ட் உற்பத்தியாகிறது. ஆனால், இங்கு தான் அதிக விலைக்கு சிமென்ட் விற்கப்படுகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு கானல் நீராக போனது.

கட்டுமான தொழிலில் ஈடுபடும் கொத்தனார், சித்தாள்கள், தச்சு வேலை செய்பவர்கள், வியாபாரிகள் என இத்தொழிலை நம்பியுள்ளவர்கள் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

தேர்தல் சமயத்தில் தி.மு.க.,அளித்த வாக்குறுதிகளின்படி, சிமென்ட், கம்பி, செங்கல், மணல் மற்றும் மரம் போன்ற முக்கியமான கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பட்டியலில் இணைத்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-அக்-202106:11:42 IST Report Abuse
Kasimani Baskaran ஆட்சிப்பீடத்தில் அமரும் முன்னரே வேகமாக கமிஷனுக்கு ஏற்பாடு செய்து விட்டபின் என்னதான் சொன்னாலும் நடவடிக்கை இருக்காது.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். அட !! எங்கு விலை குறைவோ! அங்கேயே வீட்டை கட்டிக் கொள்ள வேண்டடயதுதானே!!! இல்லாவிட்டால் அங்கே கட்டி லாரியில் ஏற்றி இங்கு கொண்டு வந்து வைத்து விட வேண்டியதுதானே!!
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
23-அக்-202118:42:43 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தலைப்பில் குறிப்பிட்டபடி இல்லாமல் செய்தியில் அதற்கு மாறாக உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X