பொது செய்தி

தமிழ்நாடு

மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசு

Added : அக் 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவ.,1ல் திறக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த செப்.1 முதல் 9-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது. ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நவ.1 முதல் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. போன்ற நர்சரி பள்ளிகளையும் பிளே ஸ்கூல் என்ற மழலையர் பள்ளிகளையும், 1- முதல் 8
நர்சரி, மழலையர், அங்கன்வாடி, பள்ளிகள், தமிழக அரசு

சென்னை: மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவ.,1ல் திறக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த செப்.1 முதல் 9-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது. ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நவ.1 முதல் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. போன்ற நர்சரி பள்ளிகளையும் பிளே ஸ்கூல் என்ற மழலையர் பள்ளிகளையும், 1- முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.


latest tamil news



இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நவ.,1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது. தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை. மழலையர், நர்சரி பள்ளிகளை திறப்பு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
23-அக்-202116:47:51 IST Report Abuse
ponssasi உண்மையை சொல்லுங்க, ஏன்?
Rate this:
Cancel
Raja Vardhini - Coimbatore,இந்தியா
23-அக்-202116:34:38 IST Report Abuse
Raja Vardhini மிக மிக சரியான முடிவு. இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் மத்தியஅரசு அறிவித்துள்ளது. எனவே, எல்லா குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்ட பின்னர் பள்ளி திறப்பதுதான் நல்லது. சரியானதும் கூட....
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
23-அக்-202115:45:46 IST Report Abuse
Vena Suna சீக்கிரமா திறங்க. வீட்டுல லூட்டி ரொம்ப அதிகம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X