பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: அமித்ஷா ஆலோசனை

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, உளவுத்துறை, பாதுகாப்புப்படை தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.ஜம்மு - காஷ்மீரில் சமீப நாட்களாக பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் அரசுமுறைப்
amitshah, kashmir, காஷ்மீர், பாதுகாப்பு ஏற்பாடுகள், அமித்ஷா,

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, உளவுத்துறை, பாதுகாப்புப்படை தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு - காஷ்மீரில் சமீப நாட்களாக பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, ஜம்மு - காஷ்மீருக்கு இன்று வந்தார். காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, இங்கு அமித்ஷா வருவது இதுவே முதல்முறையாகும். ஸ்ரீநகருக்கு தனி விமானத்தில் சென்ற அமித் ஷாவை, கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
குப்கர் சாலையில் உள்ள ராஜ்பவனில் அமித்ஷா தங்க உள்ளதை தொடர்ந்து,ராஜ்பவனில் இருந்து, 20 கி.மீ., சுற்றளவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஸ்ரீநகரில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய வகை விமானங்கள் மற்றும் ரோந்து படகுகள் உதவியுடன் ஆள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணிகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டனர்.


latest tamil news




இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த காஷ்மீர் போலீஸ் பர்வேஷ் அகமது தரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: வீரமரணம் அடைந்த பர்வேஷ் அகமது அகமது தரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். அவரின் வீரத்தை கண்டு தேசம் பெருமை கொள்கிறது. அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்படும். பிரதமர் மோடியின் கொள்கையான புதிய காஷ்மீர் என்ற கொள்கை நோக்கி போலீசார் பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் நவ்காம் கிராமத்திலும் ஆய்வு செய்த அமித்ஷா, ராஜ்பவன் திரும்பி மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள மற்றும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, உளவுத்துறை, பாதுகாப்புப்படை தலைவர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
23-அக்-202116:56:39 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN பா.ஆ.கா (POK) பிடிப்பதால் மட்டுமே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பிரச்சனை முடிவுக்கு வரும், நம் நாட்டு மக்கள் POK வை நாம் மீட்டு விட்டோம் என்ற நல்ல செய்தியை கூடிய சீக்கிரம் எதிர்பார்கிறார்கள். திரு. மோடியும் அமித்ஷாஜி, திரு.ராஜ்நாத்சிங், திரு. அஜித் தோவல் மற்றும் நமது உளவுத்துறையும் எற்கனவே இதற்கான வேலையை ஆரம்பித்தது இருப்பார்கள் என நம்புகிறோம். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
23-அக்-202113:23:38 IST Report Abuse
தியாகு ஓட்டு வங்கிக்காக மூர்க்க கூட்ட பயங்கரவாதிகளை அனுசரித்து போக அமித்ஷாஜி என்ன கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவா? இல்ல அன்டோனியோ மைனோவின் ஊழல் காங்கிரெஸ்ஸா? தேச பற்று கொண்ட பாஜகபா. சாணக்கியரின் பதிலடியை பார்க்கத்தான் போறானுங்க மூர்க்கனுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X