கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உடல்களை தகனம் செய்வதை தடுத்தால் கடும் நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: ‛‛உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தனது கணவருக்குச் சொந்தமான நிலத்துக்குச் செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம்
தமிழகம், உடல்கள் தகனம், தடுத்தால் நடவடிக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அறிவிப்பு

சென்னை: ‛‛உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தனது கணவருக்குச் சொந்தமான நிலத்துக்குச் செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அப்போது நீதிபதி தெரிவித்ததாவது: மரணத்திற்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை. உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும். மயானம் என அறிவித்த பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களையும் தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு தமிழக அரசு சார்பில், ‛‛கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ளபோதிலும், குறிப்பிட்ட சமுதாயத்தினர், அதைப் பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறையை பின்பற்றுகின்றனர். அனைத்துத் தரப்பினரும் மயானத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத்துறை அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mannandhai -  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-202106:44:48 IST Report Abuse
mannandhai அப்படியே கோயமுத்தூர் பக்கம் போங்க . சுண்டக்காமுத்தூர் போறவழியில ஓர் மின் மயானம் . அது பிராமணர்களுக்கு மட்டும் தான் . தெரிஞ்சா கனம் நீதிபதி என்ன சொல்வாரோ
Rate this:
Balaji - Chennai,இந்தியா
24-அக்-202119:35:33 IST Report Abuse
Balajiசொந்த செலவில் அவர்களே நடத்திக்கொண்டால் யாரும் அதை கேள்வி கேட்க முடியாது.. அரசு ஹிந்து அறநிலையத்துறை மூலம் நடத்தும் மயானங்களில் ஏதாவது அப்படி இருக்கிறதா?...
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
23-அக்-202116:51:53 IST Report Abuse
Kumar ஐயா துரைமார்களே ,அது என்ன தகனம் செய்யும் போது மட்டும்,அதாவது எரிக்கும் போது மட்டும் ஜாதி பார்க்கக்கூடாது. அப்ப புதைக்கும் போது ஜாதி பார்க்கலாமா? இந்துக்களைத் தவிர பிற மதத்தை சேர்ந்தவர்களில் பிரிவினை இல்லையா?ஒரு பிரிவை சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்தால் ,மற்ற பிரிவினரின் கல்லறையில் புதைக்க முடியுமா?கண்டிப்பாக முடியாது. கொரானாவில் மரணம் அடைந்த மருத்துவர்,மற்ற ஒரு பிரிவைச்சேர்ந்த கல்லறையில் புதைக்கும் போது பிரச்சனை ஏற்பட்ட போது என்ன செய்தீர்கள்? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
23-அக்-202116:25:47 IST Report Abuse
ஆரூர் ரங் சென்ற ஆண்டு சென்னையில் ஒரு டாக்டரின் உடலை கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் புதைக்கவிடாமல்🤔 துரத்தியது இன்னும் நினைவுக்கு வருகிறது மதம் மாறினால் சாதிபேதம் மாறுமோ ? கோர்ட்டுக்குப் போன பின் மீண்டும் அங்கே புதைக்க ஆணை வந்தது. அதனால் தடுத்தவர்கள் மனம்மாறிவிட்டது எனக் கூற முடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X