பொது செய்தி

தமிழ்நாடு

10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் மதுரை, கன்னியாகுமரி, வேலுார், சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் (1.5 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு
tamilnadu, 10district, heavyrain, chennai, Weather, report, தமிழகம், 10 மாவட்டங்கள், கனமழை, வானிலை ஆய்வு, மையம், அறிவிப்பு,

சென்னை: ‛‛தமிழகத்தில் மதுரை, கன்னியாகுமரி, வேலுார், சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:



latest tamil news



லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் (1.5 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அக்.,23ம் தேதி: கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள் , மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news


Advertisement


நாளை 24ம் தேதி: சேலம், மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலுார் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை:



latest tamil news



அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:



latest tamil news



பெருந்துறை (ஈரோடு) 9 செ.மீ., அணைக்கட்டு (திருவண்ணாமலை), 6 செ.மீ., அன்னுார் (கோவை, எடப்பாடி (சேலம்), முசிறி (திருச்சி) தலா 5 செ.மீ., ஈரோடு, பவானிசாகர் (ஈரோடு), போளூர் (திருவண்ணாமலை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), ராசிபுரம் (நாமக்கல்) தலா 4 செ.மீ., எண்ணுார் (திருவள்ளூர்), செங்கம் (திருவண்ணாமலை), திருவண்ணாமலை, குமாரபாளையம் (நாமக்கல்), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 3 செ.மீ.,

குறிப்பு: வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவநிலை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26 அக்டோபர் ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:



latest tamil news




வங்கக்கடல் பகுதிகள்:


வரும் 26 மற்றும் 27ம் தேதி: மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்


அரபிக்கடல் பகுதிகள்:



இன்று 23 மற்றும் 24ம் தேதி: கேரள கடலோர பகுதி, அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X