பொது செய்தி

இந்தியா

நீதித்துறை உள்கட்டமைப்பு: தலைமை நீதிபதி கவலை

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய சட்டத்துறை அமைச்சருடன் இணைந்து பங்கேற்ற விழாவில், நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கவலை தெரிவித்துள்ள தலைமை நீதிபதி ரமணா, ‛‛வரும் குளிர்கால பார்லிமென்ட் தொடரில் தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு ஆணையத்தை கொண்டு வர வேண்டும்,'' என வலியுறுத்தினார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவில் நீதித்துறை
தலைமை நீதிபதி, ரமணா, உச்சநீதிமன்றம்,

புதுடில்லி: டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய சட்டத்துறை அமைச்சருடன் இணைந்து பங்கேற்ற விழாவில், நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கவலை தெரிவித்துள்ள தலைமை நீதிபதி ரமணா, ‛‛வரும் குளிர்கால பார்லிமென்ட் தொடரில் தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு ஆணையத்தை கொண்டு வர வேண்டும்,'' என வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவில் நீதித்துறை உள்கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் உள்ளது. இந்த மனநிலை காரணமாக, இந்தியாவில் நீதிமன்றங்கள் இன்னும் பாழடைந்த கட்டமைப்புகளுடன் செயல்படுகின்றன. இதனால், திறம்பட செயல்படுவது கடினமாக உள்ளது. இந்தியாவில் உள்ள 5 சதவீத நீதிமன்ற வளாகங்களில் தான் அடிப்படை மருத்துவ வசதிகள் உள்ளன. 26 சதவீத நீதிமன்றங்களில் பெண்களுக்கு என தனி கழிப்பறை வசதி கிடையாது. 16 சதவீத நீதிமன்றங்களில், ஆண்களுக்கு கூட கழிப்பறை இல்லை. 50 சதவீத நீதிமன்றங்களில் நூலகங்களும், 46 சதவீத நீதிமன்றங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படவே இல்லை.


latest tamil news


இது குறித்த திட்டத்தை மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளேன். இதற்கு விரைவில் நேர்மறையான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இது குறித்த நடவடிக்கைகளை அவர் விரைவுபடுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-அக்-202122:36:37 IST Report Abuse
Kasimani Baskaran இவ்வளவு நாளும் ஒரு தலைமை நீதிபதியும் இது பற்றி மூச்சு விடவில்லையா?
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
23-அக்-202121:37:11 IST Report Abuse
Duruvesan எல்லா கேஸ் தீர்த்துட்டேங்கோ,
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
23-அக்-202118:15:04 IST Report Abuse
GMM தேசிய நீதித்துறை உள் கட்டமைப்பு ஆணையம் மத்திய அரசு அமைக்க வேண்டும். தேசிய நீதிபதி பணி நியமனம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் தேவை. நீதிமன்ற வழக்குகள் ஏழைக்கு இலவசம். பணக்காரருக்கு actual expitures paid service. இதன் வருவாய் கட்டமைப்பை அமைக்க , பராமரிக்க உதவும். தாவா பொருளை பணமாக மாற்றி, வாதி, பிரதிவாதிக்கு பிரித்து கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X