அரசியல் செய்தி

தமிழ்நாடு

அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்?: ம.நீ.ம., கேள்வி

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: ‛‛அம்மா உணவகங்கள் அழிவை நோக்கி செல்கிறதா?'' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கேள்வி எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மலிவு விலையில் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கோவிட்டிற்கு பிறகு பலமடங்கு பெருகியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு, அவற்றை
அம்மா உணவகம், கமல், கமல்ஹாசன், மநீம, மக்கள் நீதி மய்யம், amma canteen, kamal, kamalhaasan, MNM

சென்னை: ‛‛அம்மா உணவகங்கள் அழிவை நோக்கி செல்கிறதா?'' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மலிவு விலையில் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கோவிட்டிற்கு பிறகு பலமடங்கு பெருகியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு, அவற்றை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் முயன்று வருகின்றன. தி.மு.க., அரசும் ‛ அம்மா உணவகங்களை கைவிடும் எண்ணமில்லை' என அறிவித்திருந்தது.

ஆனால், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களை குறைந்து வருவதாகவும் வெளி வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களை திடீரென பணி நீக்கமும் , பணியிட மாற்றமும் செய்வதும் நிகழ்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள், வாய்மொழி உத்தரவு வாயிலாக இதை நிறைவேற்றி வருவதாக சொல்கின்றன ஊடகங்கள்.


latest tamil news


இந்த நடைமுறை மாற்றங்களுக்கு அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்குவதே காரணம் என்கிறார்கள். சென்னை மாநகராட்சி தன் வருவாயை பெருக்கிக்கொள்ள பல வழிகள் இருக்கையில், சிறிய நஷ்டத்தை காரணம் காட்டி இத்தகைய நல்ல திட்டங்களை சிதைப்பது மக்கள் நலன் நாடும் அரசுக்கு உகந்த அழகல்ல. இத்திட்டத்தின் கீழ் பலனையும் பணியாளர்கள், பயனாளிகள் அனைவருமே சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உணவு மனிதர்களின் அடிப்படை உயிர் ஆதார விசைகளில் ஒன்றாக இருக்கும்போது, அதைக்குறைந்த விலையில் தரும் திட்டத்திற்கு செலவு செய்ய அரசு அமைப்புகள் தயங்கவே கூடாது. ‛ அம்மா உணவகத் திட்டம், பெயர் மாற்றப்படாமலேயே சிறப்பாக தொடரும்' என்ற ஸ்டாலின் உறுதிமொழி அளித்திருக்கிறார். ஆனால், வரும் செய்திகள் அந்த உறுதிமொழிக்கு எதிரானதாக உள்ளன.

ஏழை எளியவர்களின் பசியாற்றும் இந்த திட்டத்தை, முந்தைய ஆட்சியாளர்களை விட சிறப்பாக செயல்படுத்துவதே அரசுக்கு பெருமை தருவதாக இருக்க முடியும். அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என முதல்வரை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கமலஹாசன் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
23-அக்-202121:36:11 IST Report Abuse
Duruvesan தாஸ்மாக்ல வாங்கினு இருந்தாங்கோ, susai 🤔😭😭
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
23-அக்-202120:56:11 IST Report Abuse
s vinayak பெரிய திரையரங்குகளிலும் அம்மா மலிவு விலை ஸ்நாக்ஸ் மையம் ஆரம்பிக்கலாம்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
23-அக்-202120:42:34 IST Report Abuse
Vena Suna அடுத்த முதல்வர் கமல் தான்..வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X