பொது செய்தி

தமிழ்நாடு

ஆஸ்கர் போட்டிக்கு செல்லும் ‛கூழாங்கல்'

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: ஆஸ்கர் 2022 போட்டிக்கு இந்தியா சார்பில் கூழாங்கல் படம் போட்டியிட உள்ளது.ஆஸ்கர் எனப்படும், 94வது அகாடமி விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடக்கிறது. இதில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்திய படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடந்தது. இதில் , ஹிந்தி மற்றும் மலையாளத்தில் 'சர்தார் உத்தாம், ஷேர்னி, செல்லோ ஷோ, நாயாட்டு' படங்களும்,
ஆஸ்கர் , கூழாங்கல்

சென்னை: ஆஸ்கர் 2022 போட்டிக்கு இந்தியா சார்பில் கூழாங்கல் படம் போட்டியிட உள்ளது.

ஆஸ்கர் எனப்படும், 94வது அகாடமி விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடக்கிறது. இதில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்திய படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடந்தது. இதில் , ஹிந்தி மற்றும் மலையாளத்தில் 'சர்தார் உத்தாம், ஷேர்னி, செல்லோ ஷோ, நாயாட்டு' படங்களும், தமிழில், 'கூழாங்கல், மண்டேலா' உள்பட 14 படங்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம், 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில், 14 படங்களையும் பார்வையிட்டனர் இதில், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் உருவான, ' கூழாங்கல்' படம் தேர்வாகியுள்ளது. 2022ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக 'கூழாங்கல்' படம் தேர்வாகியுள்ளது. இப்படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.


latest tamil news


சமீபத்தில், ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், 'கூழாங்கல்' படத்துக்கு 'டைகர் விருது' கிடைத்தது. இந்த வகையில் டைகர் விருதை பெற்ற முதல் படமாக இப்படம் உள்ளது. யதார்த்தமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் தியேட்டரில் வெளியாகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
24-அக்-202118:50:12 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கட்டாயம் விருது தரமாட்டார்கள் இந்தியப் படததுக்கு. அதுவும் தமிழ் படத்துக்கு கிடைக்காது. வேஸ்ட். ஆஸ்காரில் உள்ளவர்களுக்கு மொழி தெரியாது. என்னதான் மொழி பெயர்ப்பு கொடுத்தாலும் புரியும் அறிவு அவர்களுக்கு இல்லை. Slum dog millionaire படத்துக்கு கிடைத்ததற்கு காரணம் இந்திய பையனுக்கு DOG என்று பெயர் வைத்ததால்தான. வெள்ளைக்காரப் பசங்கள் நம்மை கேவலப்படுத்தும் படத்துக்கு விருது கொடுப்பார்கள். சத்யஜித் ரே படங்களுக்கு விருது கிடைத்ததே அதனால்தான். நமது ஏழ்மையை, நாம் படும் கஷ்டத்தைபார்த்து ஆனந்தபபட்டு விருது தந்துள்ளனர்..
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
23-அக்-202121:13:35 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் நாமே திரைப்படங்கள் மூலம் நமது ஏழ்மையைப் பறைசாற்றிக்கொள்வதுதான் நல்ல படைப்பு என்று இந்திய இயக்குனர்களும், ஆஸ்கருக்காக தேர்ந்தெடுக்கும் குழுவினரும் எண்ணுகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X