கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவிற்கு உரிமை இல்லை: பழனிசாமி,பன்னீர்செல்வம் வாதம்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: ‛‛அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை,'' என, பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா இறப்புக்கு பின், பொதுச் செயலராக சசிகலாவும்; துணை பொதுச்செயலராக தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதன்பின், சொத்துக் குவிப்பு வழக்கில்,
சசிகலா, அதிமுக, பன்னீர்செல்வம், பழனிசாமி,

சென்னை: ‛‛அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை,'' என, பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா இறப்புக்கு பின், பொதுச் செயலராக சசிகலாவும்; துணை பொதுச்செயலராக தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதன்பின், சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, 2017 செப்., 12ல், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அதில், நிர்வாகிகளாக சசிகலா, தினகரன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது' என, அறிவிக்கக்கோரி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.பின், அ.ம.மு.க., என்ற கட்சியை நடத்தி வருவதால், இந்த வழக்கில் இருந்து விலகுவதாக, தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சசிகலா மட்டும் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.


latest tamil news


இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பழனிசாமி, பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை,'' என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெறாததால், வழக்கு வரும் அக்.,27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
23-அக்-202123:35:15 IST Report Abuse
சீனி இந்தமாவை போண்டியாக்குற வரை திமுக உசுப்பேத்தி வரும் என்பது தான் உண்மை. சசி ஏதோ இருக்க காசை நல்லமாதிரி செலவு பண்ணி வாழ்க்கையில் ஜாலியா இருப்பது நல்லது, ரஜினிகாந்த் இந்த விசியத்தில் கில்லாடி. சிவாஜிகணேசன், விஜயகாந்த் உட்பட பலபேர் அரசியலில் பணம் செலவு பண்ணி போண்டியாவர்கள் அதிகம். எனவே சசி அதிமுகவிற்க்கு ஆதரவுகொடுத்து, அரசியலில் விலகியிருப்பது நல்லது. அதிமுகவை ஒழிக்கும் சதியின் துருப்புசீட்டுதான் சசி, ஆனா சசியும் விரைவில் போண்டியாவது தான் உண்மை.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
23-அக்-202121:45:59 IST Report Abuse
Visu Iyer சிறையில் இருந்து விடுதலை ஆகும் முன் சசிகலா அம்மையாருக்கு உடல் நலம் சரியில்லை என்று செய்தி வந்தது.. இவர்கள் அப்போ அவர்களை சந்தித்து நலம் விசாரிக்கவில்லை.. சரி.. விடுதலை ஆன பிறகாவாது சந்தித்து நலம் விசாரித்து இருக்கலாம். அதுவும் செய்யவில்லை.. சரி..சின்னம்மாவை சந்திக்க பயம் தான் என்றால் கூட சசிகலா என்ற சின்னம்மா நலம் பெற வேண்டுகிறோம் என்று அறி அறிவிப்பாகவாவது கொடுத்து இருக்கலாம்... அப்படி எதுவும் செய்யவில்லை என்பதால் திட்டமிட்டு ஏமாற்ற படுகிறார் என்பதை உங்களால் யூகிக்க முடிந்தால், ..............மற்றது தானே புரியும்.. உங்களுக்கே இத்தனை புரிகிறது என்றால், ஜட்ஜ் ஐயாவுக்கு புரியாது என்றா நினைக்கிறீர்கள்.. அதற்காக வழக்கை குன்கா ஜியிடமா தர வேண்டும் என்று விரும்புகிரீர்... சரி இப்போவாவது சசிகலாவை ஒரு மரியாதை நிமித்தம் சந்திப்பார்களா ? என்று அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் மனம் வெம்பி அழுகிறார்கள்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
23-அக்-202121:02:30 IST Report Abuse
Visu Iyer சசிகலா அம்மா ஜெயலலிதா அம்மா கூட இருந்தாங்க தானே.. அந்த மரியாதைக்கு அவரை பழனிசாமியும் பன்னீரும் சந்திக்கலாம் தானே... ஆனால் இதுவரை ஒரு மரியாதைக்கு கூட சந்திக்கவில்லை..சசிகலா கஷ்டப்பட்டு காப்பாற்றிய ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் பதவி மற்றும் அரசியல் காரணங்களுக்காக யாருக்கு பங்கு உள்ளது என்பதை ஊகிக்க முடிகிறது அல்லவா... ஏற்க்கனவே கொடநாடு வழக்கு வேற நிலுவையில் இருக்கு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X