ஆப்கனில் சம்பளம் இல்லாமல் வறுமையில் வாடும் ஆசிரியர்கள் போராட்டம்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
காபூல்: கடந்த 4 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வராததால் வறுமையில் வாடுவதாக கூறி, ஆப்கானிஸ்தான் ஹெராட் மாகாணத்தில் இன்று (அக்.,23) நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்ததாவது: தலிபான்கள் உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். மோசமான நிதிநிலையில் எங்கள் குடும்பத்தினர்கள் உணவு, மருத்துவம் போன்ற மிக அத்தியாவசியமான
ஆப்கானிஸ்தான், ஆசிரியர்கள், சம்பளம் இல்லை, வறுமை, போராட்டம்,

காபூல்: கடந்த 4 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வராததால் வறுமையில் வாடுவதாக கூறி, ஆப்கானிஸ்தான் ஹெராட் மாகாணத்தில் இன்று (அக்.,23) நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்ததாவது: தலிபான்கள் உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். மோசமான நிதிநிலையில் எங்கள் குடும்பத்தினர்கள் உணவு, மருத்துவம் போன்ற மிக அத்தியாவசியமான மற்றும் அன்றாட தேவைளைக் கூட சமாளிக்க முடியவில்லை.


latest tamil news



எங்கள் குடும்பங்களை வறுமை விரட்டுகிறது. ஒரு மாதமாக மருத்துவமனைக்கு கூட போக முடியாமல் தவிக்கிறோம். அன்றாடத் தேவைகளுக்காக வீட்டு உபயோகப் பொருட்களை எல்லாம் விற்றுவிட்டோம். இனி விற்பதற்குக் கூட ஒன்றுமில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹெராட் மாகாண கல்வித் துறை தலைவர் சுஹாபுதீன் சாஹிப் கூறுகையில், ‛‛வரவிருக்கும் நாட்களில் ஒரு மாத சம்பளம் முதலில் வழங்கப்படும்,'' என்றார்.

கடந்த வாரம், இதேபோல் நூரிஸ்தா, சமங்கன் பகுதிகளில் மருத்துவர்கள் போராட்டத்தின் போது சம்பளம் கேட்டதோடு, மருத்துவமனைகளில் அடிப்படை மருந்துகளுக்குக் கூட கடும் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
24-அக்-202108:18:55 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் உலகம் முழுவதும் இதே போன்ற நல்லாட்சி தேவை மோடியாலோ, பிஜேபியாலோ இந்த நல்லாட்சியை கொடுக்க முடியாது
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
24-அக்-202108:09:28 IST Report Abuse
Kumar இவர்களைப் பற்றி என்ன கூற முடியும். உடனே இங்குள்ள கூலிபானகள் குஜராத்திப் பார்,உபியைப் பார் என்று கூச்சல் இடுவார்கள். படிப்பே தேவை இல்லை என்று கூறுபவர்கள் எப்படி ஊதியம் வழங்குவார்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-அக்-202104:45:41 IST Report Abuse
J.V. Iyer அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் "நமக்கென்ன" என்று நல்லவர்கள் விலகி இருந்ததால் இன்று இவர்கள் அனுபவிக்கிறார்கள். தமிழகத்திலும் இப்படிஒரு நிலைமை வந்திருக்கிறது. ஆனால் மத்தியில் ஒரு நல்ல ஆட்சி தமிழகத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X