சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்| Dinamalar

சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி: அடுத்த ஆண்டு உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பாஜ., உள்ளிட்ட பல கட்சிகள் தற்போது முதலே தேர்தல் பிரசாரத்தை துவங்கிவிட்டன.அவ்வப்போது அரசியல் கட்சிகள் ரத யாத்திரை மற்றும் ஊர்வலம் நடத்திவரும் நிலையில் தற்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பிரதிக்யா யாத்திரை என்ற பெயரில் அரசியல் ஊர்வலத்தை துவங்கியுள்ளார்.
congress, priyanka, priyankagandhi, congress,  காங்கிரஸ், பிரியங்கா, பிரியங்காகாந்தி,

புதுடில்லி: அடுத்த ஆண்டு உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பாஜ., உள்ளிட்ட பல கட்சிகள் தற்போது முதலே தேர்தல் பிரசாரத்தை துவங்கிவிட்டன.

அவ்வப்போது அரசியல் கட்சிகள் ரத யாத்திரை மற்றும் ஊர்வலம் நடத்திவரும் நிலையில் தற்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பிரதிக்யா யாத்திரை என்ற பெயரில் அரசியல் ஊர்வலத்தை துவங்கியுள்ளார். மதுரா, புந்தேல்கண்ட் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக செல்ல உள்ளனர்.


latest tamil news


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் தாங்கள் உத்தரபிரதேச மாநில குடிமக்களுக்கு செய்யவுள்ள நன்மைகள் குறித்து இந்த யாத்திரையில் எடுத்துரைக்கப்படும். வரும் நவம்பர் 1ஆம் தேதி யோடு இந்த அரசியல் யாத்திரை நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



முன்னதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், இதேபோன்று அரசியல் ரத யாத்திரையை மாநிலத்தின் முக்கிய நகரங்களில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X