பொது செய்தி

தமிழ்நாடு

புதிய மாஸ்டர் பிளான்: திருப்பூரில் ஆலோசனை

Added : அக் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்: ''அடுத்த ஆண்டு பிப்., மாதம், திருப்பூருக்கு புதிய 'மாஸ்டர் பிளான்' வெளியிடப்படும்'' என, நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா பேசினார்.திருப்பூருக்கு, 'மாஸ்டர் பிளான்' தயாரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலர்
 புதிய மாஸ்டர் பிளான்: திருப்பூரில் ஆலோசனை

திருப்பூர்: ''அடுத்த ஆண்டு பிப்., மாதம், திருப்பூருக்கு புதிய 'மாஸ்டர் பிளான்' வெளியிடப்படும்'' என, நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா பேசினார்.திருப்பூருக்கு, 'மாஸ்டர் பிளான்' தயாரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா பேசியதாவது:திருப்பூருக்கு, 'மாஸ்டர் பிளான்' அவசியம். மாநகராட்சி மற்றும் ஆறு ஊராட்சிகளுடன் இருந்த, உள்ளூர் திட்டக்குழுமம் விரிவாக்கம் செய்யப்படும். திருப்பூர் மாநகராட்சி, அவிநாசி, திருமுருகன்பூண்டி, ஊத்துக்குளி, சாமளாபுரம் பேரூராட்சிகள், மாநகராட்சியை சுற்றியுள்ள, 20 ஊராட்சிகளுடன், எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.திருப்பூர் உள்ளூர் திட்டக்குழுமம், 219 சதுர கி.மீ., பரப்பில் இயங்கியது; 520 சதுர கி.மீ., அளவுக்கு விரிவாகிறது.
மாவட்டத்தின் சொத்து மற்றும் வசதிகள் குறித்து ஆலோசித்து, புதிய 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்படும்.பின்னலாடை தொழில்துறையினரும், தன்னார்வலரும், தங்கள் கருத்துக்களை தயக்கமின்றி பதிவு செய்ய வேண்டும். நவ., 15ல், அரசுக்கு வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். 2022 பிப்., மாதத்தில், 'மாஸ்டர் பிளான்' வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
24-அக்-202113:11:02 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் தன்னை வெறுக்கும் டுமீல் நாட்டுக்கு (உள்ளூர் ஆட்சியால் பயனில்லாவிட்டாலும்) பிஜேபியின் அன்பு பரிசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X