பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக தேவைக்கு 4 லட்சம் டன் மத்திய அரசு தருகிறது நிலக்கரி

Added : அக் 23, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக மின் வாரியத்திற்கு அவசர தேவைக்காக, ஒடிசாவில் உள்ள ஹின்குலா, பல்ராம் உள்ளிட்ட பல சுரங்கங்களில் இருந்து, மத்திய அரசு 4.34 லட்சம் டன் நிலக்கரியை ஒதுக்கிய நிலையில், அதை எடுத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.துாத்துக்குடி, திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் தினமும் மின்
 தமிழக தேவைக்கு 4 லட்சம் டன்  மத்திய அரசு தருகிறது நிலக்கரி

சென்னை:தமிழக மின் வாரியத்திற்கு அவசர தேவைக்காக, ஒடிசாவில் உள்ள ஹின்குலா, பல்ராம் உள்ளிட்ட பல சுரங்கங்களில் இருந்து, மத்திய அரசு 4.34 லட்சம் டன் நிலக்கரியை ஒதுக்கிய நிலையில், அதை எடுத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

துாத்துக்குடி, திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் தினமும் மின் உற்பத்திக்கு பயன்படுத்த 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி., வேலி மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மத்திய அரசின்,'கோல் இந்தியா' நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து, தமிழகத்திற்கு நிலக்கரி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒடிசா சுரங்கங்களில் எடுக்கப்படும் நிலக்கரி தினமும் சரக்கு ரயில்களில் ஏற்றப்பட்டு, அம் மாநிலத்தில் உள்ள பரதீப் துறைமுகத்திற்கு அனுப்பப்படுகிறது.மேற்கு வங்கத்தில் எடுக்கப்படும் நிலக்கரி, அம்மாநிலத்தில் உள்ள ஹால்டியா துறைமுகத்திற்கு அனுப்பப் படுகிறது.அங்கிருந்து கப்பல்களில் நிலக்கரி ஏற்றப்பட்டு, எண்ணுார் மற்றும் துாத்துக்குடி துறைமுகங்களுக்கு எடுத்து வரப்படுகிறது. அங்கிருந்து அனல் மின் நிலைய வளாகங்களுக்கு அனுப்பப்படுகிறது.

தற்போது, மழை உள்ளிட்ட காரணங்களால், பல சுரங்கங்களில் இருந்து நிலக்கரிஎடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பல மாநிலங்களின் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு ஒதுக்கிய நிலக்கரியை முழுவதுமாக வழங்குமாறு, மின் வாரிய அதிகாரிகள், நிலக்கரி அமைச்சகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக மின் வாரியத்திடம், நேற்றைய நிலவரப்படி, மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது.இந்நிலையில் மத்தியஅரசு, ஒடிசாவில் உள்ள ஹின்குலா, பல்ராம், பரத்பூர், அனந்தா, ஜகனாத் ஆகிய சுரங்கங்களில் இருப்பில் உள்ள 4.34 லட்சம் டன் நிலக்கரியை, தமிழக மின் வாரியத்திற்கு ஒதுக்கி, எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

இதனால், அந்த சுரங்கங்களில் இருந்து லாரிகளில் நிலக்கரியை ஏற்றி, சாலை மார்க்கமாக ஒடிசாவில் உள்ள நிர்கன்டி மற்றும் ஹின்டோலா ரயில்வே யார்டுக்கு அனுப்ப, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அங்கிருந்து சரக்கு ரயில்களில் ஏற்றி, பரதீப் துறைமுகம் வழியாக தமிழகத்திற்கு எடுத்து வரும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X