பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு பட்டாசு கடை நாளை முதல் துவக்கம்

Added : அக் 23, 2021
Share
Advertisement
சென்னை:தீபாவளியை முன்னிட்டு, கூட்டுறவுத் துறை சார்பில் நாளை முதல் கூட்டுறவு பட்டாசு கடைகள் துவக்கப்பட உள்ளன.கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு பண்டக சாலைகள், தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு கடைகள் துவக்குவது வழக்கம். அந்த கடைகளில் குறைந்த விலைக்கு பட்டாசு வகைகள் விற்கப்படும்.அடுத்த மாதம் 4ம் தேதி, தீபாவளி கொண்டாடப்படுகிறது.
 கூட்டுறவு பட்டாசு கடை நாளை முதல் துவக்கம்

சென்னை:தீபாவளியை முன்னிட்டு, கூட்டுறவுத் துறை சார்பில் நாளை முதல் கூட்டுறவு பட்டாசு கடைகள் துவக்கப்பட உள்ளன.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு பண்டக சாலைகள், தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு கடைகள் துவக்குவது வழக்கம். அந்த கடைகளில் குறைந்த விலைக்கு பட்டாசு வகைகள் விற்கப்படும்.அடுத்த மாதம் 4ம் தேதி, தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து, நாளை முதல் கூட்டுறவு பட்டாசு கடைகள் துவக்கப்பட உள்ளன.இதன்படி, சென்னையில், டி.யு.சி.எஸ்., எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சார்பில், தேனாம்பேட்டை, ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை, அடையாறு, திருவல்லிக்கேணி உட்பட 12 இடங்களில், நாளை முதல் பட்டாசு கடைகள் செயல்படும்.

காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை, பூங்கா நகர் கூட்டுறவு பண்டக சாலை, வட சென்னை கூட்டுறவு பண்டக சாலை ஆகியவற்றின் சார்பில், அண்ணா நகர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் 40 பட்டாசு கடைகள் திறக்கப்பட உள்ளன.

இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், தலா 10 முதல் 15 பட்டாசு கடைகள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.பட்டாசு விற்பனையின் போது காகித 'பில்' வழங்கப்படுவதால், குறைந்த தள்ளுபடி வழங்கி, அதிக தள்ளுபடி வழங்கியதுபோல் பதிவு செய்வது உட்பட பல முறைகேடுகள் நடக்கின்றன. இதை தடுக்க, பட்டாசு விற்பனையை கணினிமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, முதல் முறையாக திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், பட்டாசு விற்பனையை கணினிமயமாக்கி உள்ளது. அனைத்து கடைகளிலும் பட்டாசு வாங்குவோருக்கு கணினி வாயிலாக ரசீது வழங்கப்படும். அதில், எம்.ஆர்.பி., எனப்படும் அதிகபட்ச சில்லரை விலை, தள்ளுபடி எவ்வளவு உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றிருக்கும்.மேலும், ஒவ்வொரு கடையிலும் நடக்கும் விற்பனை விபரங்களை, திருவல்லிக்கேணி, பெரிய தெருவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்தபடி, அதிகாரிகள் உடனுக்குடன் கண்டறிய முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X