பொது செய்தி

இந்தியா

அடுத்த ஆண்டு இந்தியர்களுக்கு 3வது பூஸ்டர் டோஸ்- எய்ம்ஸ் தலைமை மருத்துவர்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
டில்லி: இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில் மூன்றாவது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தற்போது டில்லி எய்ம்ஸ் தலைமை மருத்துவ நிபுணர் ரஞ்சித் குமார் விளக்கம் அளித்துள்ளார். அடுத்த ஆண்டு இந்தியர்களுக்கு 3வது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று கூறி உள்ளார். கொரோனாவின் இரண்டாவது

டில்லி: இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில் மூன்றாவது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தற்போது டில்லி எய்ம்ஸ் தலைமை மருத்துவ நிபுணர் ரஞ்சித் குமார் விளக்கம் அளித்துள்ளார். அடுத்த ஆண்டு இந்தியர்களுக்கு 3வது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று கூறி உள்ளார்.



latest tamil news



கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் கடுமையான ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. இதன்காரணமாக பலர் அவதியுற்றனர். முதல் மற்றும் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இந்தியாவில் பரவி பல உயிர்களை பலி கொண்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது வரும் டிசம்பர் மாத இறுதியில் மூன்றாவது அலை இந்தியாவைத் தாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது பெரும்பாலான இந்திய குடிமக்களுக்கு தடுப்பு மருந்துகள் இரண்டு டோஸ் செலுத்தப்பட்டுவிட்ட நிலையில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள மூன்றாவது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என கூறப்பட்டது.

இதன் மூலமாக வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்திய குடிமக்களுக்கு அதிக வீரியம் கிடைக்கும் என நம்பப்பட்டது. உலக நாடுகள் பல மூன்றாவது டோஸ் தடுப்பு மருந்தை குடிமக்களுக்கு செலுத்துவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்தியாவில் அடுத்த ஆண்டு மூன்றாவது பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று டில்லி எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலாரியா தகவல் அளித்துள்ளார். முதல் இரண்டு டோஸ்களின் வீரியம் குறையும் நேரத்தில் மூன்றாவது டோஸ் தேவைப்படுகிறது. நிலைமையை பொறுத்து அடுத்த ஆண்டு மூன்றாவது டோஸ் எப்போது அறிமுகப்படுத்தலாம் என்று இந்திய அரசு முடிவெடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



கிட்டத்தட்ட அனைத்து இளைஞர்கள் மற்றும் வயோதிகர்களுக்கு முதல் இரண்டு டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிட்டது. தற்போது 12 வயதிலிருந்து 18 வயதுக்கு உள்ளான பதின் பருவத்தினருக்கு குழந்தைகளுக்கும் தடுப்பு மருந்து செலுத்த இந்திய சுகாதாரத் துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

குழந்தைகளில் நீண்ட நாள் நோய் பாதிப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ரன்தீப் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-அக்-202121:39:00 IST Report Abuse
A.George Alphonse ஒவ்வொரு கொரோனா அலை வரும்போதும் தடுப்பூசி. போட்டுக்கொள்ளவேண்டுமா?அப்ப கொரோனா அலைகளும் ஓய்வதில்லை.தடுப்பூசியும் ஓய்வதில்லை.இனிமேல் இதுதான் வாழ்க்கை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X