கடைசி ஓவரில் ஆஸி., வெற்றி: தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021
Share
Advertisement
அபுதாபி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-12' போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எமிரேட்ஸ், ஓமனில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை நடக்கிறது. அபுதாபியில் நடந்த 'சூப்பர்-12' சுற்றுக்கான 'குரூப்-1' போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் 'பீல்டிங்' தேர்வு

அபுதாபி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-12' போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



latest tamil news



எமிரேட்ஸ், ஓமனில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை நடக்கிறது. அபுதாபியில் நடந்த 'சூப்பர்-12' சுற்றுக்கான 'குரூப்-1' போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த தென் ஆப்ரிக்க கேப்டன் டெம்பா பாவுமா (12), மேக்ஸ்வெல் 'சுழலில்' போல்டானார். ஹேசல்வுட் 'வேகத்தில்' வான் டெர் துசென் (2), குயின்டன் (7) வெளியேறினர். ஹெய்ன்ரிச் கிளாசன் (13) நிலைக்க வில்லை. ஆடம் ஜாம்பா 'சுழலில்' டேவிட் மில்லர் (16), டிவைன் பிரிட்டோரியஸ் (1) அவுட்டாகினர். கேஷவ் மஹராஜ் (0) 'ரன்-அவுட்' ஆனார்.

விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் பொறுப்பாக ஆடிய மார்க்ராம், ஹேசல்வுட் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். ஸ்டார்க் பந்தில் மார்க்ராம் (40), நார்ட்ஜே (2) ஆட்டமிழந்தனர். ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் ரபாடா ஒரு சிக்சர் அடிக்க, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்தது. ரபாடா (19) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட், ஜாம்பா, ஸ்டார்க் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச் (0) ஏமாற்றினார். ரபாடா பந்தில் 3 பவுண்டரி அடித்த டேவிட் வார்னர் (14) நிலைக்கவில்லை. கேஷவ் மஹராஜ் 'சுழலில்' மிட்சல் மார்ஷ் (11) சிக்கினார். பின் இணைந்த ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. நான்காவது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்த போது நார்ட்ஜே பந்தில் ஸ்மித் (35) அவுட்டானார். ஷாம்சி பந்தில் மேக்ஸ்வெல் (18) போல்டானார்.பின், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மாத்யூ வேட் ஜோடி இணைந்து போராடியது. ரபாடா வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் வேட்.


latest tamil news




கடைசி ஓவரில் 8 ரன் தேவைப்பட்டன. பிரிட்டோரியஸ் வீசிய 20வது ஓவரின் 2, 4வது பந்தில் பவுண்டரி விளாசிய ஸ்டாய்னிஸ் வெற்றியை உறுதி செய்தார். ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 121 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் (24), வேட் (15) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் நார்ட்ஜே 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X