அ.தி.மு.க., நிர்வாகி இளங்கோவன் வீட்டில் ரூ.70 கோடி பங்கு முதலீடு ஆவணங்கள் பறிமுதல் 20 கிலோ தங்கம், பறிமுதல்| Dinamalar

அ.தி.மு.க., நிர்வாகி இளங்கோவன் வீட்டில் ரூ.70 கோடி பங்கு முதலீடு ஆவணங்கள் பறிமுதல் 20 கிலோ தங்கம், பறிமுதல்

Updated : அக் 24, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (30) | |
ஆத்தூர்: அ.தி.மு.க., நிர்வாகி இளங்கோவன் வீட்டில்,70 கோடி ரூபாய் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பங்கு முதலீடு ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள, அ.தி.மு.க.,வை சேர்ந்த, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், 57, அவரது மகன் பிரவீன்குமார், 27, ஆகியோர் மீது, வருமானத்துக்கு

ஆத்தூர்: அ.தி.மு.க., நிர்வாகி இளங்கோவன் வீட்டில்,70 கோடி ரூபாய் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பங்கு முதலீடு ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news


சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள, அ.தி.மு.க.,வை சேர்ந்த, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், 57, அவரது மகன் பிரவீன்குமார், 27, ஆகியோர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இளங்கோவனின் தொழில் நண்பரான, தி.மு.க., நிர்வாகி புத்திரகவுண்டன்பாளையம் வரதராஜ்; அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை பொருளாளர் வாழப்பாடி குபேந்திரன் ஆகியோரது புத்திரகவுண்டன்பாளையம், கருமந்துறை, வாழப்பாடியில் உள்ள நகை கடைகளில் சோதனை செய்தனர்.இந்த சோதனையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள பங்கு முதலீடுகளின் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சோதனை விபரங்கள் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:

மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளை துணை தலைவரும், மகனுமான பிரவீன்குமார், குடும்ப உறுப்பினர்கள் பெயரில், தனது பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, , சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சென்னை - 3, கோவை - 1, நாமக்கல் - 3, திருச்சி, முசிறி - 6, சேலம் - 23 என, மொத்தம் 36 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 5.5 லட்சம் மதிப்பிலான அந்நிய செலாவாணி, 25 கோடி ரூபாயில் உள்நாட்டு பங்கு வர்த்தக முதலீடுகள் மற்றும் 45 கோடி ரூபாயில் வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.


latest tamil news




மேலும், சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள ஒரு நகை கடையில் (அ.தி.மு.க., நிர்வாகி குபேந்திரன்), 20 கிலோ தங்க நகைகள் மற்றும் 280 கிலோ வெள்ளி நகைகள் இருப்பை விட கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டது.இதுதொடர்பாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, உரிய துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X