27 சதவீத ஒதுக்கீடு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., மனு| Dinamalar

27 சதவீத ஒதுக்கீடு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., மனு

Added : அக் 23, 2021
Share
புதுடில்லி:'மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 27சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, இனி எந்த ஒரு வழக்கையும் அனுமதிக்க கூடாது' என, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., மனு தாக்கல் செய்துள்ளது.'நீட்' தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டில்

புதுடில்லி:'மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 27சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, இனி எந்த ஒரு வழக்கையும் அனுமதிக்க கூடாது' என, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., மனு தாக்கல் செய்துள்ளது.

'நீட்' தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி., வகுப்பினருக்கு 27சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10சதவீதமும் மத்திய அரசு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.


வழிகாட்டுதல்

இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.இதற்கிடையே 'மருத்துவ படிப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த எந்த தடையும் விதிக்க கூடாது' என, வலியுறுத்தி தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நீண்ட போராட்டத்துக்கு பின் தான், மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி.,க்கு 27 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியே இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக இனி எந்த ஒரு வழக்கும் தொடர அனுமதி அளிக்கக் கூடாது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக மனு தாக்கல் செய்து உள்ளோர், தகுதி பற்றி குறிப்பிடுகின்றனர்.


சமமான வாய்ப்பு

சமூகத்தில் அனைத்து பிரிவினரும் சமமான நிலையை அடையவே ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கவே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, ௨௭ சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X